Kathir News
Begin typing your search above and press return to search.

ஆக்கிரமிப்பில் இருந்த அகத்தீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான 150 கோடி மதிப்பிலான சொத்து மீட்பு!

ஆக்கிரமிப்பில் இருந்த அகத்தீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான 150 கோடி மதிப்பிலான சொத்து மீட்பு!

ஆக்கிரமிப்பில் இருந்த அகத்தீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான 150 கோடி மதிப்பிலான சொத்து மீட்பு!

Muruganandham MBy : Muruganandham M

  |  23 Jan 2021 7:25 AM GMT

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அகத்தீஸ்வரர் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயிலுக்கு சொந்தமான 150 கோடி மதிப்பிலான ஆக்கிரமிப்பு நிலம் மீட்கப்பட்டது.

இக்கோயிலுக்கு சொந்தமாக நூற்றுக்கணக்கான கட்டிடங்கள், நிலங்கள் உள்ளன. அதில் குறிப்பிட்ட ஒரு இடத்தில் 13 வீடு, கடைகள் மற்றும் வாகன நிறுத்தங்கள், பள்ளி கட்டிடம், தொழிற்சாலைகள் செயல்பட்டு வந்தன.

இந்த நிலத்திற்கு 30 ஆண்டுகளுக்கு மேலாக வாடகை செலுத்தாமல் சம்பந்தப்பட்ட நபர்கள் ஆக்கிரமிப்பு செய்திருந்ததாக கூறப்படுகிறது. குறிப்பாக, தற்போது வரை 11 கோடி வரை வாடகை பாக்கி வைத்திருந்ததாக தெரிகிறது. இதுதொடர்பாக கோயில் நிர்வாகம் சார்பில் வாடகையை செலுத்த கோரி பலமுறை நோட்டீஸ் அனுப்பியும் உரிய பதில் அளிக்கவில்லை.

இந்நிலையில், நீதிமன்றத்தில் கோயில் நிர்வாகம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்து அறநிலையத்துறை சட்டப்பிரிவு 78ன் படி கடை வைத்திருப்பவர்கள் ஆக்கிரமிப்பாளராக கருதி அகற்ற உத்தரவிட்டது. ஆக்கிரமிப்புகளை அகற்ற ஒரு தரப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இதனால், அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவியது.

இதையடுத்து அவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக பேச்சுவார்த்தை நடந்தது. அப்போது வாடகை பாக்கி முழுவதையும் செலுத்த நிபந்தனை விதிக்கப்பட்டன. இதற்கு, ஆக்கிரமிப்புதாரர்கள் ஆட்சேபம் தெரிவித்தனர்.

அப்படியெனில் வாடகை செலுத்தாவிட்டால் சீல் வைப்பதை தவிர வேறு வழியில்லை என்று போலீசார் தெரிவித்தனர். இதை தொடர்ந்து அந்த கட்டிடத்துக்கு சீல் வைக்கப்பட்டு, கோயில் வசம் ஒப்படைக்கப்பட்டது. இதன் மூலம் 30 ஆண்டுகளாக ஆக்கிரமிப்பில் இருந்த கட்டிடம் மீட்கப்பட்டுள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News