ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் யானையை தாக்கிய பாகன்கள் 2 பேர் கைது.!
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் யானையை தாக்கிய பாகன்கள் 2 பேர் கைது.!
By : Kathir Webdesk
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் யானைகளுக்கு என்று சிறப்பு புத்துணர்வு முகாம் நடைபெறுகிறது. இந்த முகாமில் தமிழகம் முழுவதும் உள்ள அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில் யானைகள் கலந்து கொண்டுள்ளது. புத்துணர்வு முகாமில் கலந்து கொண்ட அனைத்து யானைகளுக்கும் சிறப்பு உணவுகள் மற்றும் சக யானைகளுடன் விளையாட்டு, ஆட்டம், பாட்டம் என்று மகிழ்ந்து கொண்டிருக்கிறது.
இதே போன்று ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் பெண் யானை ஜெயமால்யாதாவும் கலந்து கொண்டது. இந்த யானையை பாகன் வினில்குமார் மற்றும் உதவியாளர் சிவபிரசாத் கவனித்து வருகின்றனர். இதனிடையே நேற்று சமூக வலைதளங்களிலும் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலின் யானையை பாகன்கள் சரமாரியாக தாக்கும் காட்சிகள் வெளியாகியது. இதனால் வனத்துறை மட்டுமின்றி பொதுமக்கள் பலரும் தங்களது கண்டனங்களை தெரிவித்தனர்.
இந்நிலையில், இரண்டு பாகன்களும் கைது செய்யப்பட்டு கோபிசெட்டிப்பாளையம் கிளை சிறையில் அடைக்கப்பட்டனர். இதனிடையே யானையை திருச்செந்தூர் கோயில் யானை உதவியாளர் சுப்பிரமணியம் கண்காணித்து வருகின்றார். அவருடன் வனத்துறை மற்றம் கால்நடை மருத்துவ குழுக்களும் ஆய்வு செய்து வருகின்றனர்.