Kathir News
Begin typing your search above and press return to search.

"21 லட்ச விளக்குகளால் ஜொலிக்க உள்ள அயோத்தி ராமர் கோவில்"

21 லட்ச விளக்குகளால் ஜொலிக்க உள்ள அயோத்தி ராமர் கோவில்

SushmithaBy : Sushmitha

  |  11 Nov 2023 3:28 AM GMT

ஒவ்வொரு வருடமும் அயோத்தியின் ராமர் கோவிலில் தீபாவளி சிறப்பாக கொண்டாடப்படும். மேலும் கோவிலை சுற்றி உள்ள மடங்கள் அனைத்துமே மின்னொளியில் ஜொலிக்கும். அந்த வகையில் கடந்த ஆண்டின் தீபாவளி அன்று அயோத்தி ராமர் கோவிலில் 15 .76 லட்சம் தீபங்கள் ஏற்றப்பட்டு சாதனை படைக்கப்பட்டது.

தற்போது உத்திரபிரதேசத்தில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டு வரும் அயோத்தி ராமர் கோவிலின் பணிகள் முடிவடைய உள்ள நிலையில் அதில் பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ராமர் சிலை எடுத்துச் செல்ல உள்ளார் என்ற தகவலும் வெளியானது. இந்த நிலையில் அயோத்தி ராமர் கோவிலின் கட்டும் பணிகளை பார்வையிட்ட உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் இந்த வருட தீபாவளி அன்று கோவிலை சுற்றியும் 21 லட்ச தீபங்கள் ஏற்றுவதற்கான ஏற்பாடுகள் அனைத்தையும் கோயில் ஊழியர்களிடமும், அதிகாரிகளிடமும் ஆலோசித்து சிறப்பாக செய்து முடிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

இதன் மூலம், தீபாவளி திருநாளன்று அயோத்தி ராமர் கோவிலில் 21 லட்சம் தீபங்கள் ஏற்றப்பட்டு புதிய சாதனையை இந்த முறை அயோத்தி ராமர் கோவில் பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Source : Dinamalar

Next Story
கதிர் தொகுப்பு
Trending News