Kathir News
Begin typing your search above and press return to search.

அயோத்தி ராமர் கோவிலுக்கு 44 அலங்கார கதவுகள்- மாமல்லபுரம் சிற்பக் கலைஞர்கள் வடிவமைப்பு!

அயோத்தியில் பிரமாண்டமாக கட்டப்பட்டு வரும் ராமர் கோவிலுக்கு தேக்கு மரத்தினால் ஆன 44 அலங்காரக் கதவுகளை மாமல்லபுரம் சிற்பக் கலைஞர்கள் வடிவமைத்தனர்.

அயோத்தி ராமர் கோவிலுக்கு 44 அலங்கார கதவுகள்- மாமல்லபுரம் சிற்பக் கலைஞர்கள் வடிவமைப்பு!
X

KarthigaBy : Karthiga

  |  11 Dec 2023 4:00 AM GMT

உத்திரபிரதேச மாநிலம் அயோத்தியில் பிரம்மாண்டமான முறையில் ராமர் கோவில் கட்டப்பட்டு பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளது. விஷ்வ இந்து பரிஷத்தின் ராமஜென்ம பூமி தீர்த்த சேதத்ரா அறக்கட்டளை சார்பில் மிகவும் கலை நுணுக்கத்துடன் அழகுற கட்டப்படும் ராமர் கோவிலில் சேண்ட் ஸ்டோன் எனப்படும் மணல்கள் மூலம் நூற்றாண்டு கணக்கான தூண்கள் மற்றும் ராமர் சீதைக்கு தனித்தனி கருவறைகள் அமைக்கப்பட்டுள்ளன.


இந்த கோவில் தரைதலத்தில் இருந்து மூன்று அடுக்குடன் 44 வாசல்களை கொண்டு கட்டப்பட்டுள்ளது. இந்த 44 வாசல்களும் சிற்ப வேலைபாடுகளுடன் கூடிய அலங்கார மரக்கதவுகள் பொருத்தப்பட உள்ளன. இதற்காக தமிழ்நாட்டில் சிற்பக்கலையில் பிரசித்தி பெற்ற மாமல்லபுரத்தில் இருந்து அலங்கார மரகதவுகளை பெற முடிவு செய்யப்பட்டது. இதை அடுத்த மாமல்லபுரம் மர சிற்பக் கலைஞர்கள் அலங்கார கதவுகளை வடிவமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.


கோவில் நுழைவு வாயில் முன் கதவு, ராமர் சீதை சன்னதிகளின் கருவறைகள், லட்சுமணர், ஆஞ்சநேயர் சன்னதிகள் பரிவார சுவாமிகளின் சன்னதிகள் என அனைத்திற்கும் அலங்கார சிற்பங்களுடன் கதவுகள் தயார் செய்யப்பட்டு வருகிறது. இந்தப் பணியில் மாமல்லபுரம் அரசினர் சிற்பக்கலை கல்லூரியில் பட்டம் பெற்ற கன்னியாகுமரி மாவட்டம் வெள்ளி சந்தை பகுதியை பூர்வீகமாகக் கொண்ட மரச்சிற்பக் கலைஞர் ரமேஷ் தளபதி தலைமையில் மாமல்லபுரம் மரச்சிற்பக் கலைஞர்கள் 40 பேர் அயோத்தி ராமர் கோவில் உள்ளாக மற்றும் மாமல்லபுரத்தில் உள்ள மானசா மர சிற்ப உற்பத்தி கூடத்திலும் ஈடுபட்டு உள்ளனர்.


இரு யானைகள் துதிக்கையை தூக்கி வரவேற்பது போலவும் கழுகுகள் பறப்பது போன்று கதவுகள் அலங்கார டிசைன்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளன. அலங்கார மரக்கதவுகள் மற்றும் அலங்கார ஜன்னல்கள் செய்ய மத்திய பிரதேசத்தில் உள்ள பலாஷா காடுகளில் இருந்து நீண்ட நாள் நிலைத்து இருக்கக்கூடிய தேக்கு மரங்கள் கொண்டு இப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன இது கறித்து மரச்சிற்பக் கலைஞர் ரமேஷ் ஸ்தபதி கூறியதாவது:-


அயோத்தி ராமர் கோவில் கட்டுமானங்கள் முழுவதும் வட இந்திய சிறபிகள் மூலம் வடிவமைக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தென்னிந்திய கலைஞர்களுக்கு வாய்ப்பு வழங்கும் வகையில் கோவில் முழுவதும் கருவறை முதல் பக்தர்கள் உள்ளே நுழையும் சன்னதி கதவுகள் வெளியேறும் கதவுகள் கர்ப கிரக மண்டபத்தில் மையக்கதவுகள் பக்கவாட்டுக் கதவுகள் வரை மாமல்லபுரம் மரச்சிற்ப கலைஞர்கள் மூலம் செய்யப்பட்டுள்ளன. இந்த கதவுகளின் மீது செப்புத்தகடுகள் பதிக்கப்பட்டு தங்கமுலாம் பூசப்பட்டுள்ளது.


பல்லாயிரம் ஆண்டுகள் அந்த கதவுகள் நீடித்திருக்க வேண்டும் என்பதற்காக தேக்கு மரங்களை பதப்படுத்தி அதன் ஈரத்தன்மையை நீக்கிவிட்டு அவை பழுதடையாமல் இருக்கும் வகையில் அதனை தயார் செய்து வடிவமைத்துள்ளோம். இதற்காக நான்கு ஆயிரத்து 500 கன அடி தேக்கு மரங்களை பயன்படுத்தி உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.


SOURCE :DAILY THANTHI

Next Story
கதிர் தொகுப்பு
Trending News