9 நாட்கள் கொண்டாடப்படும் நவராத்திரி திருவிழா இன்று தொடக்கம்!
இந்து பண்டிகைகளில் மிகவும் முக்கியம் வாய்ந்ததாக கருதப்படுகிறது நவராத்திரி திருவிழா. அதாவது மகிஷாசுரனுடன் 9 நாட்கள் போரிட்ட அம்பாள், பத்தாவது நாளான தசமியன்று வெற்றி பெற்றார். இதன் ஐதீகத்தின்படி புரட்டாசி மாதம் 9 நாட்கள் நவராத்திரி விழாவாக கொண்டாடப்படும். பத்தாவது நாளில் தசமி அன்று விஜயதசமி விழா நடைபெறும்.

இந்த நாட்களில் வீடுகள், கல்வி நிறுவனங்கள், தொழிற்சாலைகள், வாகனங்கள் உள்ளிட்டவை சுத்தம் செய்யப்பட்டு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடத்துவார்கள். இந்த நவராத்திரி விழாவின் போது முக்கிய நிகழ்வாக 9 நாட்களிலும் கலை உணர்வு, பக்தி ஆகியவற்றை வெளிப்படுத்தும் விதமாக வீடுகளில் கொலு வைக்கும் நிகழ்ச்சி நடைபெறும். தினந்தோறும் காலை, மாலை இரண்டு வேலையும் கொலுவின் முன்பாக கோலமிட்டு, விளக்கேற்றி, மலர்கள் அலங்கரிக்கப்பட்டு படையல் போட்டு வழிபாடுகள் நடைபெறும்.
அதில் முப்பெரும் தேவியரின் வழிபாடாகவும் இருக்கும். முதல் மூன்று நாட்கள் துர்க்கையை வேண்டியும், இடையில் உள்ள மூன்று நாட்கள் லட்சுமி தேவியை வேண்டியும், கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதி தேவியை போற்றியும் வழிபாடு செய்யப்படும்.
இந்த நவராத்திரி விரதத்தை கடைப்பிடிப்பவர்களுக்கு வேண்டிய அனைத்தும் ஈடேறும் என்பதும், முப்பெரும் செல்வங்களாக கருதப்படும் கல்வி, செல்வம், வீரத்தை அடைவார்கள் என்பது இந்துக்களின் நம்பிக்கை ஆகும். அதன்படி நவராத்திரி திருவிழா இன்று (அக்டோபர் 7) தொடங்குகிறது. இனி வரும் ஒன்பது நாட்கள் மற்றும் விஜயதசமி வழிபாடு என்று அடுத்து வருகின்ற 10 நாட்களும் வீடுகளில் கொலு, வழிபாடு என நடைபெற்றுக்கொண்டிருக்கும்.
Source: Daily Thanthi
Image Courtesy: Zee News