பூமாதேவி வழிபட்டதால் பூமிநாதர் என்று பெயர் பெற்ற அதிசய திருத்தலம்.!
பூமாதேவி வழிபட்டதால் பூமிநாதர் என்று பெயர் பெற்ற அதிசய திருத்தலம்.!
By : Thoorigai Kanaga
துவாபர யுகத்தில் பேரழிவை ஏற்படுத்திய பெருவெள்ளம் ஏற்பட்ட போது, இவ்வூரின் மன்னன் இயற்கை பேரிடரிலிருந்து இவ்வூரை காக்க வேண்டி சிவபெருமானை வேண்டிய போது சிவன் தன்னுடைய சூழத்தால் பூமியில் ஒரு சுழியை உண்டாக்கி அதனுள் மொத்த வெள்ளத்தை புக செய்தார் என்பதால் இந்த ஊருக்கு திருசுழியல் என பெயர் வந்தது என புராணங்கள் சொல்கின்றன. இந்த தலத்தில் பூமாதேவி சிவபெருமானை தரிசத்தார் என்பதால் இந்த இறைவனுக்கு பூமிநாத சுவாமி என்ற பெயரும் உண்டு.
இங்குள்ள நடராஜரின் விக்ரகம் மிக மிக தத்ரூபமாக வடிக்கப்பட்டது. இந்த நடராஜர் விக்ரகம் பச்சிலை மூலிகையால் உருவாக்கபட்டது என்பது இக்கோவிலின் தனிச்சிறப்பு.
தேவார பாடல்களில் இடம் பெற்றுள்ள கோவில்களுள் 202 ஆக பாடப்பெற்ற தேவார தலம் இது என்பதால் சைவக்கோவில்களுள் முக்கியமானதாக கருதபடுகிறது. இந்த கோவிலை நினைத்தாலோ, சிந்தித்தாலோ பாவங்கள் விலகும் வல்லமை இந்த கோவிலுக்கு உண்டு. சிவராத்திரியன்று இங்குள்ள சிவனை ஒரு வில்வ இலை கொண்டு அர்ச்சித்தால் அனைத்து சிவாலாயங்களிலும் உரைந்திருக்கும் சிவனை பல ஆயிரம் வில்வ இலைகளை கொண்டு வணங்கிய நன்மையை பெற முடியும் என்பது ஆழ்ந்த நம்பிக்கை.
அருப்புக்கோட்டையில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் கிழக்கில் அமைந்துள்ளது திருச்சுழி. விருதுநகர் மாவட்டத்திலிருந்து 40 கி.மீ தொலைவிலும் மதுரையிலிருந்து தெற்கே வந்தால் 45 கி.மீ தொலைவில் இந்த இடம் அமைந்துள்ளது. இந்த தலத்தின் பெயர் திருமேனி நாதர்.
இங்கு சிவனுடன் இருக்கும் அம்பிகைக்கு துணைமாலை நாயகி என்று பெயர். இங்கிருக்கும் அய்யனும், அம்மையும் திருமண கோலத்தில் காட்சி தருவதால். திருமண தடையிருப்போர் இங்கு வந்து பிரார்த்திப்பதும். மற்றும் பல திருமண நிகழ்வுகள் இந்த கோவிலில் நிகழ்வதும் வழக்கம்.
இது ஶ்ரீ ரமண மகரிஷி பிறந்த தலம் என்பது கூடுதல் சிறப்பு.
மேலும் இங்கிருக்கும் சிவபெருமான் மீது வருடத்திற்கு இருமுறை சூரிய ஒளி படுமாறு கோவிலின் அமைப்பு அமைந்துள்ளது. மேலும் இங்கிருக்கும் அம்பிகையின் பிராகராத்தில் இரண்டு சாளரம் உண்டு. இதில் பெரும்பாலும் தேனிக்கள் கூடு கட்டியிருப்பதுண்டு. சூரியன் வலப்புறம் சஞ்சாரம் செய்கையில் வலப்புறமும், சூரியன் இடப்புறம் சஞ்சாரம் செய்கையில் இடப்புறமும் இந்த தேனிக்கள் மாறி மாறி கூடு கட்டுவது மற்றொரு ஆச்சர்யம்.