விஷ்ணு பகவான் உருவாக்கும் சாளக்கிராமம்!
சாளக்கிராமக்கல் மகாவிஷ்ணுவின் அம்சமாகவே பார்க்கப்படுகிறது. இதனை விஷ்ணுவே உருவாக்குவதாகவும் ஐதீகம் கூறப்படுகிறது.
By : Karthiga
நேபாளத்தில் உள்ள இமயமலை அடிவாரப் பகுதியில் 'ஹரி பர்வதம்' என்ற மலை உள்ளது. இங்கே சங்கர தீர்த்தம் எனும் பகுதியில் பாயும் கண்டகி நதியில்தான் சாளக்கிராம கற்கள் உற்பத்தி ஆகின்றன. இந்த கல் வைணவ வழிபாட்டில் உள்ளவர்களுக்கு தெய்வீகம் பொருந்தியதாக பார்க்கப்படுகிறது. இதனை வீட்டின் பூஜையில் வைத்து வழிபடுபவர்கள் எண்ணிக்கை ஏராளம். இந்த சாளக்கிராமக்கல் பல வண்ணங்களிலும் பல வடிவங்களிலும் கிடைக்கின்றன.
மகாவிஷ்ணுவே தங்கமயமான ஒளி பொருந்திய 'வஜ்ரகிரீடம்' எனும் புழுவாக வடிவம் எடுத்து சாளக்கிராம கற்களை குடைந்து அதன் மையத்திற்குள் சென்று ஓம்கார சத்தம் எழுப்பியபடி தன் முகத்தினால் பல்வேறு அடையாளங்களை ஏற்படுத்துவதாக புராணங்கள் சொல்கின்றன. அப்படி உருவாகும் சாளகிராம கற்களில் நாராயணனின் ஜீவ வடிவம் ஐக்கியமாகி இருப்பதால் அந்த சாளக்கிராம கலையும் மகாவிஷ்ணுவின் வடிவமாகவே பக்தர்கள் போற்றுகின்றனர்.