Kathir News
Begin typing your search above and press return to search.

விவேகானந்தர் சொல்லும் மனம் சித்தராமை ஒரு மனிதருக்கு எத்தனை முக்கியம்?

விவேகானந்தர் சொல்லும் மனம் சித்தராமை ஒரு மனிதருக்கு எத்தனை முக்கியம்?

விவேகானந்தர் சொல்லும் மனம் சித்தராமை ஒரு மனிதருக்கு எத்தனை முக்கியம்?

Thoorigai KanagaBy : Thoorigai Kanaga

  |  9 Nov 2020 5:45 AM GMT


ஒரு விஷயத்தை நம் மனம் விரும்புகிறது என்றால் அந்த விஷயம் உண்மையில் தேவைப்படுகிறதா இல்லைஅது வெறும் கற்பனையான மேம்போக்கான ஆசையா என்பதை உறுதி செய்ய வேண்டும். "நீங்கள் அடைய நினைப்பதை குறித்து எச்சரிக்கையாய் இருங்கள் " என்று ஒரு ஜப்பானிய பழமொழி உண்டு.

அடுத்ததாக அடைய நினைப்பது என்ன என்பதை குறித்த தெளிவான முடிவு நமக்கு இருத்தல் அவசியம். உதாரணமாக கோடிஸ்வரன் ஆகவேண்டும் என்று மேம்போக்காக நினைப்பது எந்தவிதத்திலும் பயன் தராது மாறாக நம்மிடத்தில் எத்தனை கோடி பணம் இருக்க வேண்டும் என்கிற தொகையை தெளிவாக உறுதி செய்து கொள்ள வேண்டும். இந்த தெளிவான திட்டமிடல் தான் நமக்கு உதவும்

அதன் பின் நாம் நினைத்து நம்மை தேடிவந்துகொண்டிருப்பதாக பாவனை செய்து கொள்ளவேண்டும், நாம் அதை பெற்றுக்கொள்வது போல் பாவனை செய்துகொள்ளவது அவசியம். ஏனென்றால் மனதிற்கு உண்மை எது பொய் எது என்று தெரியாது, வலிமையான உண்ரவ்வுகளை அது நிஜம் என்று எடுத்துக்கொண்டு செயலாற்ற தொடங்கி விடும் . நாம் நினைத்ததை அடைவதில் உணர்வுகளும் காட்சிகளும் முக்கிய பங்காற்றுகின்றன. நம் எண்ணங்களை விட உணர்வுகளே நினைத்ததை அடைய நமக்கு உதவியாக இருக்கும். உதாரணமாக நமக்கு ஒரு கார் வேண்டும் என்று எண்ணுவதை காட்டிலும் தினமும் காரில் அமர்ந்து பயணம் செய்வது போன்ற உணர்வை நாம் வளர்த்துக்கொண்டால் அந்த உணர்வுகள் நிஜமாகவே ஒரு நாள் உண்மையாக கூடும் . ஆழ்மனம் உணர்வுகளாலும் காட்சிகளாலுமே உந்தப்படுகிறது

எக்காரணம் கொண்டும், நாம் எண்ணுவதிலோ உணர்வதிலோ சோர்வடைந்துவிட கூடாது, சிலநேரநாளில் நாம் நினைத்தது சீக்கிரம் கிடைத்துவிடும் சில நேரங்களில் தாமதமாக கிடைக்கும்.

அதற்காக நம் எதிர்மறை உணர்வுகளையோ இது கிடைக்காது என்கிற உணர்வுகளையோ வளர்த்துக்கொள்ளக்கூடாது பிறகு அதுவே நமக்கு தடையாகி விடும். கவனக்குவிப்பு என்பது மிக முக்கியம் நம் விரும்பும் ஒன்றின் மீது அதீதமான கவனம் வேண்டும் மனம் வேறு எதன்மீதும் சிதறாத தன்மையுடன் இருக்க வேண்டும் இதை தான் சுவாமி விவேகானந்தர் "ஷ்ரத்தா ' அல்லது சிரத்தை என்கிறார்.

இறுதியாக நாம் ஒரு குறிக்கோளை அல்லது லட்சியத்தை முடிவு செய்து அதை நம்பிய பிறகு அதை நாமே சந்தேகப்பட்டுவிடக்கூடாது. ஒரு முறை நாம் லட்சியத்தை முடிவு முழுமையாக நம்பி விட்டால் பிறகு பிரபஞ்சம் அதை நிறைவேற்ற விட்டுவிட வேண்டும்

Next Story
கதிர் தொகுப்பு
Trending News