அகத்தியருக்கு திருமன கோலத்தில் காட்சி தந்த அதிசய தலம்! காயரோகணேஷ்வரர் ஆலயம்!
அகத்தியருக்கு திருமன கோலத்தில் காட்சி தந்த அதிசய தலம்! காயரோகணேஷ்வரர் ஆலயம்!
By : Thoorigai Kanaga
பொன்னி நதிக்கரையில் அமைந்துள்ள தேவார பாடப்பெற்ற தலங்களுள் இந்த சிவத்தலம் 82 ஆவதாக விளங்குகிறது காயரோஹணசுவாமி கோவில், நாகபட்டிணம். அப்பர், சுந்தரர், சம்பந்தர் ஆகிய மூவராலும் பாடப்பெற்ற ஸ்தலமாக இது விளங்குகிறது. இங்கே காரோகண சுவாமியுடன் அம்மையார் நீலயாதாட்சி அருள் பாலிக்கிறார்.
இங்கிருக்கு பெருமானுக்கு காயரோஹணம் என பெயர் வர பலக்காரணங்கள்ச் சொல்லப்படுகின்றன. காய என்றால் உடல், அரோஹணா எழுதல் என்று ஒரு பொருள் உண்டு. இதற்கு அப்பாற்ப்பட்டு, புண்ட்ரீக முனிவரை இத்திருத்தலத்தில் இறைவன் தனது உடலில் ஆரோகணம் செய்ததால் காயாரோகணம் என்று பெயர் பெற்றதாகவும், அதுவ்வே பின்னாளில் மருவி காரோணம் என்ற பெயராக மாறியதாகவும் சொல்லப்படுகிறது.
இந்த கோவில் பலவிதமான ஊழி க்காலங்களில் பல விதமான இயற்கை சீற்ராங்களை கடந்து இன்றும் உயர்திருப்பதால் இந்த கோவிலை ஆதிபுராணம் என்றும், இந்த கோவிலில் இருக்கும் இறைவனை ஆதி புராணேஸ்வரர் எனவும் அழைக்கின்றனர்.
இந்த தலம் சைவத்தை பின்பற்றுபவர்களுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தலமாகும். இங்கு நிகழ்ந்திருக்கும் தலசிறப்புகளும், அதிசயங்களும் ஏராளம். அந்த வகையில், இறைவன் தன் திருமண கோலத்தில் அகத்தியருக்கு இங்கு தான் காட்சியளித்துள்ளார். 63 நாயன்மார்களில் ஒருவரான அதிபத்த நாயனார் அவட்தரித்த தலம் இதுவே ஆகும்.
இந்த கோவிலின் தெய்வீக தன்மைக்கு சான்றாக இங்கு ஏராளமான தெய்வங்களும், முனிவர்களும் இறைவனை வணங்கியுள்ளனர். ஆதிசேஷன்ம் புண்ட்ரீக முனிவர் அக்கத்தியர், முருகன்ம் திருமால், வசிட்டர், முசுகுந்தன், விசித்திரகவசன், விரூரன், சண்டமாருதன், இன்னும் பலர் இங்கே இறைவனை வழிபட்டதாக தொன்மையான நம்பிக்கை உண்டு.
தேவரம் பாடிய மூவரில் சுந்தரருக்கு இறைவன் குதிரை, முத்துமாலை, நவமணிகள் பட்டு உள்ளிட்ட பொருட்களை வழங்கிய இடம் இது. இறைவன் பெருமான், தன்னுடைய குதிரை வாகனத்தை சுந்தருக்கு வழங்கியதால், இக்கோவிலில் குதிரைவாகன விழா சுந்தரருக்கு நிகழ்த்தப்படுவது வழக்கம்.
மேலும் அதிசயமாக இந்த கோவிலின் தேர் கண்ணாடியால் ஆனது எனவும் சொல்லப்படுகிறது. நாகபட்டிணத்திலிருந்து 2.கி.மீ தூரத்தில் அமைந்துள்ளட்து இந்த கோவில். இங்கு அதிபத்த நாயனார் அவதரித்து, முத்தி அடைந்த தலமாக திகழ்கிறது. மேலும் கயிலையிலும், காசியிலும் இருப்பதை போல இங்கே முக்தி மண்டபம் அமைந்துள்ளது.