Kathir News
Begin typing your search above and press return to search.

அனுமன் அவதரித்த ஆஞ்சநேயாத்ரி மலை

ஸ்ரீ ராம பக்தனான அனுமன் அவதரித்த இடமான ஆஞ்சநேயாத்ரி மலை உள்ள திருத்தலத்தை பற்றி காண்போம்.

அனுமன் அவதரித்த ஆஞ்சநேயாத்ரி மலை
X

KarthigaBy : Karthiga

  |  8 Aug 2023 5:15 AM GMT

புராதனமான நினைவு சின்னங்கள் உள்ள ஊர்களில் விஜயநகர பேரரசர்களால் உருவாக்கப்பட்ட ஹம்பி நகரத்திற்கு முக்கிய இடம் உண்டு. கர்நாடக மாநிலத்தில் உள்ள இந்த ஹம்பிக்கு அருகில் அனுமனஹள்ளி என்ற இடத்தில் அமைந்து இருக்கிறது 'ஆஞ்சநேயாத்ரி மலை' . இதனை 'அஞ்சனா மலை' என்றும் அழைக்கிறார்கள். புராணங்கள் சொல்லும் கூற்றின்படி இந்த இடம்தான் கிஷ்கிந்தையாக இருந்ததாகவும், அஞ்சனாதேவி வாழ்ந்த மலை தான் அஞ்சனா மலை என்றும் அழைக்கப்படுவதாக சொல்லப்படுகிறது.


அதாவது இந்த இடத்தில் தான் ஆஞ்சநேயர் பிறந்தார் என்கிறது இந்த ஆலயத்தின் தல வரலாறு. ஹம்பியிலுள்ள சுற்றுலா தலங்களில் மலை மீது அமைந்த இந்த அனுமன் கோவில் மிகவும் முக்கியமான ஒன்றாகும். இந்த மலை தனித்துவமான அழகை கொண்டு விளங்குகிறது. இதன் சுற்றுப்புறத்தின் இயற்கை அழகும் மலையின் உச்சியில் நின்று ஊரை பார்க்கும் கண்கொள்ளாக்காட்சியும் இங்கு வருபவர்களின் எண்ணிக்கையை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. ஆஞ்சநேயர் பிறந்த இடம் என்பதால் இது பக்தர்களின் புனித யாத்திரை தலைப்பில் முக்கியமானதாகவும் இருக்கிறது.


ஆஞ்சநேயர் இங்கு பிறந்ததால் 'ஆஞ்சநேயாத்ரி' என்று அழைக்கப்படும் இந்த மலை இருக்கும் பகுதிதான் ராமாயண காவியத்தில் சொல்லப்பட்டுள்ள கிஷ்கிந்தா என்ற பகுதியாகும். மலையின் உச்சியில் ஆஞ்சநேயருக்கான ஆலயம் அமைக்கப்பட்டிருக்கிறது. கல்லால் ஆன படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த மலையில் ஏறுவது அனைவருக்கும் எளிதான ஒன்றாக இருக்கிறது. ஆஞ்சநேயர் ஆலயம் வெள்ளை நிற பூச்சிகளால் தூய்மையான எண்ணத்தை நம் மனதில் விதைக்கிறது .


ஆலயத்தின் மேற்கூரையில் ஒரு சிறிய சிவப்பு நிற குவி மாடம் கொண்ட பிரமிடு அமைப்பு உள்ளது. அதன் உச்சியில் சிவப்பு நிறக் கோடி ஒன்று பறக்க விடப்பட்டுள்ளது. இது மகாபாரதப் போரில் அர்ஜுனனுக்கு சாரதியாக இருந்து கிருஷ்ணர் செலுத்திய தேரின் மீது இருந்த கொடியை நமக்கு உணர்த்துகிறது. அர்ஜுனனின் தேரின் மீது கொடியாக இருந்தது அனுமன் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆலயத்திற்குள் எளிமையான பாறையில் அனுமனின் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. கோவிலுக்குள் ராமர் மற்றும் சீதாதேவி ஆகியிருக்கும் சிறிய சன்னதி அமைந்துள்ளது.


இந்த ஆலயத்தில் அனுமனை தரிசிக்க ஆண்டு முழுவதும் பக்தர்கள் வந்து செல்கிறார்கள். மலையின் உச்சியில் இருந்து பார்க்கும்போது கீழே ஓடும் துங்கபத்திரா நதியின் காட்சிகளும் நம் மனதை மயக்குகின்றன . இந்த மலையில் ஏராளமான குரங்குகளும் காணப்படுகின்றன. அவற்றையும் அனுமனின் உருவமாகவே பக்தர்கள் கண்டு வணங்குகின்றனர். ஹம்பியில் இருந்து சுமார் ஐந்து கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது இந்த 'ஆஞ்சநேயாத்திரி' மலை. இம் மமலையை தரிசிக்க விமான மூலமாகவும் செல்ல முடியும. ரயில் நிலையத்திலிருந்தும் செல்ல முடியும். பேருந்து வழியாகவும் செல்ல முடியும்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News