காவிரிக்கு சீர் கொடுக்கும் அரங்கநாதர் - ஆடிப்பெருக்கு விழாவில் அரங்கேறும் அற்புதம்
ஆடிப்பெருக்கு அன்று திருவரங்கம் அரங்கநாதர் காவிரிக்கு சீர் கொடுப்பதாக நிகழும் வைபோகம் நடைபெறுகிறது.
By : Karthiga
காவிரி அன்னை திருவரங்கம் அரங்கநாதரின் தங்கையாக கருதப்படுகிறாள். ஆடிப்பெருக்கு சமயபுரம் பகுதியில் கோலாகலமாக இருக்கும் . இவ்வூரில் உள்ள சகோதரர்கள் தங்கள் சகோதரிகளையும் மைத்துனர்களையும் வீட்டிற்கு அழைத்து சீர்கொடுக்கும் வழக்கம் இன்றும் இருக்கிறது. தம்பதியரை இங்குள்ள ஆதி மாரியம்மன் கோவிலுக்கும் அழைத்துச் செல்வர். இவை சமயபுரம் மாரியம்மன் சகோதரியாக கருதப்படுகிறாள்.
சாதாரண மக்கள் சீர் கொடுப்பது போலவே திருவரங்கத்தில் கோவில் கொண்டிருக்கும் அரங்கநாதரும் தனது தங்கையான காவிரி தாய்க்கு சீர்ககொடுக்கிறார் . ஆடிப்பெருக்கு அன்று திருவரங்கம் அரங்கநாதர் காவிரி கரையில் உள்ள அம்மா மண்டப படித்துறைக்கு எழுந்தருள்வார். அங்குள்ள மண்டபத்தில் அரங்கநாதருக்கு திருமஞ்சனம் நடைபெறும். மாலை வரை அங்கேயே வீற்றிருப்பார். சீதனப் பொருட்களாக பட்டு, தாலி பொட்டு, மஞ்சள் உள்ளிட்ட மங்களப் பொருட்கள் காவிரி ஆற்றில் மிதக்க விடப்படும்.