Kathir News
Begin typing your search above and press return to search.

ஸ்படிக மாலை அணிவதால் இவ்வளவு நன்மைகளா?

அழகை எடுத்துக்காட்டுவதற்காகவே நகைகள் அணிகின்றோம்.நகையைப் போலவே ஸ்படிக மாலைக்கும் முக்கியத்துவம் உண்டு

ஸ்படிக மாலை அணிவதால் இவ்வளவு நன்மைகளா?
X

KarthigaBy : Karthiga

  |  10 Sept 2022 6:15 PM IST

அழகு ,தெய்வப்பிரியம் ,ஆத்தும தரிசனம் ,ஆரோக்கிய ரட்சை, ஸ்தானக்குறிப்பு ,தோஷ நிவாரணம் என்ற நன்மைகளுக்காகவே நகைகள் அணிகின்றோம். 14 உலோகங்களின் சின்னமாக தலையிலும் ,நெற்றியிலும் காதிலும் ,மூக்கிலும் ,உதட்டிலும், கழுத்திலும் ,தோளிலும், புஜத்திலும் கையிலும், மார்பிலும் ,இடுப்பிலும் பாதங்களிலும் ,கால்விரலிலும், கைவிரலிலும், நகைகள் அணிவதுண்டு.


தங்கமும் வெள்ளியும் அணியும்போது கைக்கொள்ளும் நம்பிக்கைகள் போலவே ஸ்படிகமாலை அணிவதன் பின்னும் சில நம்பிக்கைகள் உண்டு. இதை அணிய உத்தமமான நட்சத்திரம் கார்த்திகையாம். ஒரு நாள் பசுவின் சாணத்தில் மூழ்க வைத்து ஸ்படிகமாலைகை தண்ணீர் பால் என்பவற்றில் கழுவி குருவின் உதவியால் அணிய வேண்டும் என்பது ஆசார விதி .எந்த காலமானாலும் வெப்பத்தை தடைசெய்யும் சக்தி ஸ்படிக மாலைக்கு உண்டு.


கிரகங்கள் மனிதரில் செலுத்தும் செல்வாக்கை கட்டுப்படுத்த இம்மாலைக்கு இயலும் .இரவு வேலை இம்மாலையை தண்ணீரில் இட்டு வைத்து மறுநாள் தண்ணீரை குடித்தால் ஆண்மை விருத்தி அடையும் என்று நம்புகின்றனர் .பௌர்ணமி நாள் அணிந்தால் உடல் சக்தி கூடும் என்றும் தம்பதிகளின் ஸ்படிகமாலை அணிந்து தூங்கக் கூடாது என்றும் விதிக்கப்பட்டுள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News