மரகதலிங்கத்தை வழிபாடு செய்வதால் இவ்வளவு நன்மைகளா?
சிவன் கோவில்களில் சிவன் பெரும்பாலும் லிங்க வடிவிலேயே காட்சி தருகிறார். சில சிவாலயங்களில் மரகதலிங்க வழிபாடு மிகவும் சிறப்பு வாய்ந்ததாக உள்ளது. மரகத லிங்கத்தை வழிபடுவதால் ஏற்படக்கூடிய நன்மைகளைப் பற்றி காண்போம்.
By : Karthiga
நவகிரகத்தில் இளவரசன் என அழைக்கப்படுவது புதன் பகவான். புதனுக்கு உரிய ரத்தினமான மரகதத்தால் செய்யப்பட்ட சிவ லிங்கத்தை நாம் வழிபாடு செய்வதால் நாம் கேட்ட வரம் தருவார் என ஆன்மிக நூல்கள் கூறுகின்றன. சில குறிப்பிட்ட ரத்தினங்களுக்கு ஆக்ரஷன் சக்தி உண்டு. அப்படி புதனுக்கு உகந்த மரகத லிங்கத்தை நாம் வணங்கி வர நம் மனக்குறைகள் நீங்கி நாம் நினைத்த வரத்தைப் பெறலாம்.
மரக லிங்கத்தை வழிபட்டு வர ஆரோக்கியம், கல்வி, பெரிய பதவி, அரசருக்கு அடுத்த பதவியைத் தரக்கூடிய யோகத்தைப் பெறலாம். அதோடு நம்முடைய தொழில், வியாபாரம் விருத்தி அடையவும், உத்தியோகத்தில் நீங்கள் நினைத்த உயரத்தை அடைய வணங்கலாம். இத்தனையும் தாண்டி, நாம் மரகத லிங்கத்தை வணங்கி வர நம்முடைய சகல தோஷங்களும் நீங்கி வாழ்க்கையில் அனைத்து நன்மைகளும் பெறலாம். சோழ சக்கரவர்த்தி முசுகுந்தா (12 ஆம் நூற்றாண்டு) கடும் தவம் செய்து ஏழு மரகத சிவலிங்கங்களை, தேவர்களின் அரசன் இந்திரனிடமிருந்து பெற்றான்.
அந்த விலைமதிக்க முடியாத மரகதலிங்கங்களை வேதாரண்யம், திருக்குவளை, திருக்கரவாசல், திருவாரூர், திருநள்ளாறு, நாகப்பட்டினம், திருவாயுமூர் ஆகிய ஏழு இடங்களில் மக்கள் வழிபாட்டிற்காக சிவ ஆலயங்களில் (சப்த விடங்க தலங்கள்) அமைத்து திருக்கோயில் எழுப்பினார்.
மரகத லிங்கத்திற்கு பால் அபிஷேகம் செய்து அதனை அருந்தினால் மிகச்சிறந்த மருத்துவ சக்தியாக இருக்கும். அதே போல மரகத லிங்கத்தின் மேல் சாற்றப்படும் சந்தனத்தைப் பூசிக்கொள்வதால் நல்ல மருத்துவ பலனைத் தரும் என்று கூறப்படுகிறது.