ஆருத்ரா தரிசனம்! காண்பதால் நிகழும் அதிசயமும் நன்மைகளும் என்ன?
ஆருத்ரா தரிசனம்! காண்பதால் நிகழும் அதிசயமும் நன்மைகளும் என்ன?

ஆருத்ரா தரிசனம் என்பது சிவ பக்தர்கள் இடையே மிக முக்கியமான நிகழ்வாக கொண்டாடப்படுகிறது. ஆருத்ர தரிசனம் என்பது தமிழ் மாதமான மார்கழியில் வரக்கூடிய திருவாதிரை நட்சத்திரத்தில் வரும் நிகழ்வாகும். மார்கழி மாதத்தின் பவுர்ணமி நாளில் வரக்கூடிய இந்த இரவை ஆண்டின் மிக நீளமான இரவாக குறிப்பிடுகிறார்கள்.
தமிழில் திருவாதிரை என்றும் அழைக்கப்படும் இந்த நட்சத்திரம், இதன் மற்றொரு ப பெயராக ஆருத்ரா என்றும் அழைக்கப்படுகிறது. ஆருத்ரா என்றால் தங்க நிறத்தில் ஜொலிக்கும் ஜூவாலை என்று பொருள். சிவபெருமான் தன்னை ஜூவாலையாக வெளிப்படுத்தி பதஞ்சலி மற்றும் மற்றொரு முனிவரின் வேண்டுகோளுக்கு இணங்க தன்னுடைய இந்த சிறப்பு மிக்க நாளில் சிறப்பு பிரசாதமாக திருவாதிரை களி எனப்படும் பிரசாதம், சிவாலயங்களில் பக்தர்களுக்கு விநியோகிக்கப்படுகிறது.
தமிழகத்தில் உள்ல ஐந்து சபைகளில், தில்லையில் இருக்கும் கனகசபை, மதுரையில் இருக்கும் வெள்ளி சபை, திருவலங்காட்டில் இருக்கும் இரத்தினசப்பை, நெல்லையில் இருக்கும் தாமிரா சபை மற்றும் ஐந்தாவதாக குற்றாலத்தில் உள்ள சித்திர சபையில் இந்த நிகழ்வு வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது.
திருவாதிரை நட்சத்திரத்தில், தில்லை சிதம்பரத்தில் 10 நாள் பெரும் விழா நடைபெறும். ஒன்பதாம் நாள் இரவு அதாவது பத்தாம் நாளின் அதிகாலையில் 3 மணி அளவில் மகா அபிஷேகம் நடராஜருக்கும் சிவகாம சுந்தரி அம்மையாருக்கும் ராஜசபையில் நடைபெறும்.
இந்த மகா அபிஷேகம் 3 முதல் 4 மணி நேரங்கள் வரை தொடர்ந்து நடைபெறும் அதற்குப்பின் சிறப்பான ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டு ரகசிய பூஜை நடராஜருக்கும் பஞ்சமூர்த்திக்கும் செய்யப்படும். அதன் பின் பஞ்ச மூர்த்தியும், நடராஜரும், சிவகாமி அம்மையாரும் திருவுலா வந்து ஆருத்ரா தரிசனத்தை வழங்கி கனகசபை நுழைவார்கள்.
இந்நாளின் சிறப்பை நாம் உணரும் வகையில் அப்பர் பெருமான் 9 ஆம் நூற்றாண்ட்ல், மைலை கோவிலில் பாடிய பதிகம் இது
. “ஊர்திரை வேலை யுலாவும் உயர்மலைக்
……………………………………………………………………………
கார்தரு சோலைக் கபாலீச்சரம் அமர்ந்தான்
ஆதிரைநாள் காணாதே போதியார் பூம்பாவாய்” .
இந்தப் பிரபஞ்ச இயக்கத்திற்கு அடிப்படையாக இருக்கக் கூடியது நடராஜரின் தாண்டவம். இந்த நடராஜரின் தாண்டவம் பிரபஞ்ச இயக்கத்திற்கு தேவையான ஐம்பூதங்களையும் குறிப்பதாக அமைந்துள்ளது. எனவே நடராஜருக்கு இந்தத் திருவாதிரை நாளில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று அதன்பின் சிறப்பு ஆருத்ரா தரிசனத்தை காண்பவர்களுக்கு மகா சிவராத்திரியில் விரதமிருந்து பெறக்கூடிய பயன் கிட்டும் என சொல்லப்படுகிறது. மேலும் நாம் செய்த சகல விதமான பாவங்களும் ஆருத்ரா தரிசனத்தை காண்பதால் நீங்கும் என்பது திண்ணம்