Kathir News
Begin typing your search above and press return to search.

அஷ்டலட்சுமி கோவில் - எங்கு உள்ளது தெரியுமா?

அஷ்டலட்சுமிக்கு என்று பிரத்தியேகமாக கோவில் உள்ள இடத்தை பற்றி காண்போம்.

அஷ்டலட்சுமி கோவில் - எங்கு உள்ளது தெரியுமா?
X

KarthigaBy : Karthiga

  |  20 Oct 2023 6:15 AM GMT

சென்னை பெசன்ட் நகர் கடற்கரை பகுதியில் எழுந்துள்ளது அஷ்டலக்ஷ்மி கோவில் செல்வத்துக்கும் செழிப்புக்கும் வழிகாட்டும் கடவுளாக பூஜிக்கும் லஷ்மி தேவியின் எட்டு அவதார கோலங்களை தரிசிக்கலாம். விஷ்ணுவின் துணைவியே லக்ஷ்மி தேவி என்பது யாவரும் அறிந்ததே! தனம் , தானியம், கஜம், சந்தானம் , வீரம், விஜயம், வித்யா போன்ற பாக்கியங்களை அருளும் அஷ்ட லட்சுமி அவதாரங்களை ஒருசேர வணங்குவது விசேஷமாகும்.


கடற்கரையை ஒட்டி வீற்றிருக்கும் இந்த கோவில் நான்கடுக்குகளை கொண்டது. இவற்றில் எட்டு அவதார வடிவங்களும் வெவ்வேறு பிரிவுகளில் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன . முதல் தளத்தில் ஆதிலட்சுமி, தைரிய லட்சுமி மற்றும் தானிய லட்சுமி ஆகியோர் அருள் புரிகின்றனர். இரண்டாவது தொகுதியில் உள்ள மகாலெட்சுமி மற்றும் மகாவிஷ்ணுவை வணங்கிய பின்னரே மற்ற தெய்வ வடிவங்களை வணங்க வேண்டும் என்ற ஐதீகம் பின்பற்றப்படுகிறது. எனவே மூன்றாவது தளத்தில் உள்ள சந்தான லட்சுமி, விஜயலட்சுமி மற்றும் கஜலட்சுமிையும் நான்காவது தளத்தில் தனலட்சுமியை வழிபட்ட பின்னர் முதல் தளத்தில் உள்ள லட்சுமிகளை வழிபடலாம்.


SOURCE :DAILY THANTHI

Next Story
கதிர் தொகுப்பு
Trending News