இந்த கோவிலில் ஆண்களுக்கு அனுமதியில்லை! ஆச்சர்யமூட்டும் ஆலயம்!
By : Kanaga Thooriga
நம் கலாச்சாரத்தில் பலவிதமான சடங்குகள், சம்பிர்தாயங்கள் பகுதிக்கு பகுதிக்கு மாறுபடும். ஒவ்வொரு பகுதிக்கும், ஒவ்வொரு மக்களின் பாரம்பரியத்திற்கும் ஏற்றார் போல சடங்குகளை வகுத்திருக்கிறார்கள் நம் முன்னோர்கள், அந்த பகுதியின் தட்பவெட்பம், உணவு விளையும் தன்மை, உட்கொள்ளும் தன்மை என பல அம்சங்களை கருத்தில் கொண்டே அவர்கள் அந்த வரையறைகளை, சடங்குகளை வகுத்திருப்பார்கள்.
அதில் குறிப்பான ஒன்று ஒரு சில இடங்களில் குறிப்பாக ஒரு சில கோவில்களில் ஆண் பெண் ஆகியோரில் ஒருவருக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. இதற்கான ஆன்மீக காரணமும், அறிவியல் தர்கமும், விரிவாக சொல்லப்பட்டுள்ளது.
இன்று நம் நாட்டில், ஆண்களுக்கு தடையிருக்கும் கோவில்களும் உண்டு. அதில் முதன்மையானது உலகிலேயே ஒரு இடத்தில் மட்டுமே இருப்பதாக கருதப்படும் பிரம்மர் ஆலயம். இக்கோவில் ராஜஸ்தான் மாநிலத்தில் அஜ்மீரிலிருந்து 15 கி.மீ தொலைவில் புஷ்கர் எனும் இடத்தில் ஜகத்பிதா பிரம்மா மந்திர் எனும் பெயரில் அமைந்துள்ளது. இந்த கோவில் வளாகத்தில் புஷ்கர் ஏரியும் அமைந்துள்ளது.
ஒரு முறை பிரம்ம தேவர் புஷ்கர் ஏரியில் யாகம் ஒன்றை நட த்தி வந்தார். அந்ட புனித நிகழ்வுக்கு பிரம்ம தேவரின் மனைவியான தேவி சரஸ்வதி சற்று தாமதமாக வந்ததால். யாகத்தை முடிக்கும் பொருட்டு, பிரம்ம தேவர் காயத்திரி எனும் தேவியை மணந்ததாகவும். தாமதமாக வந்து சேர்ந்த சரஸ்வதி தேவி இதை கண்டு சினமுற்று சாபமிட்டதாக வரலாறு. அந்த சாபத்தின் காரணமாகவே இங்கு திருமணமான எந்த ஆண்களும் உள்ளே நுழையக்கூடாது என்ற விதி இருப்பதாக சொல்லப்படுகிறது.
பெண்மையை மற்றொரு கோவிலில் ஆண்களை விடவும் பெண்களுக்கே அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது. அது கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் அமைந்துள்ள அட்டுகல் கோவில். இங்கு வைக்கும் அட்டுகல் பொங்கல்ல் மிகவும் பிரசித்தி பெற்றது. ஒவ்வொரு வருடமும் இந்த நிகழ்வில் பங்கேற்க 3 மில்லியன் பெண்கள் இத்திருத்தலத்தில் குவிகிறார்கள். இக்கோவில் ஶ்ரீ பத்மநாபசாமி திருக்கோவிலில் இருந்து 2 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இங்கு கண்ணகி தேவி அருள் பாலிக்கிறார். இவர் பார்வதியின் அம்சமாக கருதப்படுகிறது. மேலும் இத்திருத்தலத்தை பெண்களின் சபரிமலை எனவும் பரவலாக அழைப்பார்கள்.
மேலும் விரதங்களில் புகழ்மிக்க விரதமான சந்தோஷி மா விரதத்தில் ஆண்கள் பங்கேற்க தடையுண்டு. இது முழுக்க முழுக்க பெண்களால் குறிப்பாக திருமணம் ஆகாத பெண்களால் கடைப்பிடிக்கப்படும் விரதமாகும்.