Kathir News
Begin typing your search above and press return to search.

அரசமரத்தை வலம் வருவதால் தீர்க்கப்படும் பல்வேறு பிரச்சினைகள்!

அரசமரத்தை ஒவ்வொரு கிழமைகளிலும் வலம் வருவதால் தீர்க்கப்படும் பல்வேறு பிரச்சினைகள்.

அரசமரத்தை வலம் வருவதால் தீர்க்கப்படும் பல்வேறு பிரச்சினைகள்!

Bharathi LathaBy : Bharathi Latha

  |  27 March 2022 1:34 AM GMT

விநாயகப் பெருமானுக்கு உகந்த மரமாக அரசமரம் விளங்குகிறது. மேலும் பல்வேறு பெண்கள் விநாயகரை வணங்கும் பொழுது அரச மரத்தை சுற்றி வருகிறார்கள். இது ஆரம்ப காலத்திலிருந்தே வழக்கத்தில் உள்ளது. இதன் பின்னணியில் அறிவியல் உண்மையும் உள்ளது உங்களுக்கு தெரியுமா? அரசமரத்தில் கீழ் நின்று ஒருவர் அதிகாலையல் சுவாசித்தல் மூலம் அவர்களுக்கு ஆக்சிஜன் அளவு மற்ற நேரங்களை காட்டிலும் மூன்று மடங்கு அதிகமாக வேலை செய்யுமாம். அந்த வகையில் தற்பொழுது அரசமரத்தை வலம் வருவதால் எந்தெந்த கிழமைகளில் எந்தெந்த பலன்கள் கிடைக்கும் என்பதை பார்ப்போம்.


அரசமரத்தை திங்கள்கிழமை வலம்வந்தால் வீட்டில் மங்கலக்காரியங்கள் எந்த தடையும் இல்லாமல் நடக்கும். செவ்வாய்கிழமை வலம் வருவதன் மூலம் உங்கள் ஜாதகத்தில் உள்ள செவ்வாய் தோஷங்களை நீக்கும். புதன்கிழமை வலம்வந்தால் வியாபாரம் பன்மடங்கு பெருகும். கல்வியில் சிறந்து விளங்க வியாழக்கிழமை வலம்வர வேண்டும். வெள்ளிக்கிழமையில் வலம் வருவதன் மூலம் நீங்கள் அனைத்து சௌபாக்கியங்களையும் பெற்று தடையின்றி வாழ முடியும். எல்லா கஷ்டங்களையும் விலக்கி மகாலட்சுமியின் அருளை சனிக்கிழமை வலம்வருவது பெற்றுத்தரும்.


தீராமல் இருக்கும் எல்லா நோயையும் ஞாயிற்று கிழமை வலம் வருதல் போக்கும். உங்கள் வசதிக்கு ஏற்ப பழமோ பூஜை சார்ந்த பொருட்களோ மரத்தின் முன்னே சமர்ப்பிக்க வேண்டும். நீங்கள் படைத்த பொருட்களை மற்றவர்களுக்கு தானமாக வழங்குவதன் மூலம் அன்னதானம் செய்த பலனையும் பெற முடியும் என்று சாஸ்திரங்கள் கூறுகிறது. துணிகளை தானமாக கொடுக்கலாம். இந்த ஆடிஅமாவாசையை மறந்துவிடாமல் உங்கள் அருகில் உள்ள அரசமரத்தை வலம் வரலாம்.

Input & Image courtesy: Maalaimalar News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News