வாழைத்தண்டில் திரியேற்றுவதால் வாழ்வில் நிகழும் ஆச்சர்யங்கள்!
By : Kanaga Thooriga
விளக்கு என்பது அறிவின், நேர்மறை ஆற்றலின் வெளிப்பாடு. தினசரி விளக்கேற்றுவது மிகவும் புனிதமானதாக கருதப்படுகிறது. தொடர்ச்சியாக விளக்கு ஏற்றும் இடத்தில் இருள், அறியாமை மற்றும் தீமைகள் அகன்று போகும் என்பது நம்பிக்கை.
குறிப்பாக நெய் தீபம் ஏற்றுவது செழிப்பையும், அறிவையும், ஞானத்தையும் வழங்கும் என நம்பப்படுவதால் அனைத்து நிகழ்வுகளிலும், விழாக்களிலும், சகல விதமான இடங்களிலும் தீபம் ஏற்றுவதை ஒரு சடங்காகவே வைத்துள்ளனர். இவ்வாறு செய்வதால் இறையருளை நாம் வீட்டினுள் வரவேற்கிறோம் என்றே பொருள்.
தீபம் ஏற்றுவதில் பல்வேறு பரிமாணங்கள் உண்டு. அதிலொன்று ஆரத்தி, கடவுளுக்கோ அவரின் திருவுருவம் அல்லது திருவுருவ படம் ஆகியவற்றின் முன்போ மென்மையாக காட்டப்படும் தீபாராதனை மிகவும் சிறப்பு வாய்ந்தது. இவ்வாறு செய்வதால் அறிவியல் ரீதியாக காற்றில் இருக்கும் நச்சுகள் அழிந்து காற்றும் சுற்று சூழலும் சுத்திகரிக்கப்படுகிறது என்பது நம்பிக்கை.
ஒவ்வொரு முறை விளக்கு ஏற்றபடும் போதும்,
"'சுபம் கரோட்டி கல்யாணம் ஆரோக்கியம் தன சம்பந்து, சத்ரு பூத்தி விநாசய தீப ஜ்யோதிர் நமோஸ்துதே, தீப ஜோத்தி பரபிரம்ம, தீப ஜோத்தி ஜனார்த்தன, தீபோ மே ஹர து பாப்பம், தீப ஜோத்திர் நமோஸ்துதே "
என்கிற மந்திரத்தை சொல்வது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். நீங்கள் ஏற்றும் தீபத்தின் திசை கூட உங்கள் வாழ்வை மாற்றக்கூடும் என்பது உங்களுக்கு தெரியுமா? நாம் பயன்படுத்தும் திரியும் திசையும் நம் வாழ்வின் விதியை மாற்றக்கூடும் என்கின்றன சாஸ்திரங்கள்.
வாழைத்தண்டில் திரி செய்து தீபமேற்றி வர நீங்கள் தெரியாமல் செய்த பாவத்தின் வினைகள் நீங்கும். மற்றும் முன்னோர்களின் சாபம் அல்லது வேறேதேனும் சாபமிருப்பின் அவை நீங்கும். பொதுவாக மன்னிப்பு கிடைக்க இந்த திரியிலான தீபம் உதவும்.
பஞ்சினால் ஆன திரி மிகவும் வழக்கமாக பயன்படுத்தப்படுவது. பஞ்சு திரியில் தீபம் ஏற்றுவது மிகவும் நல்ல அதிர்வுகளை, சகுனத்தை வழங்கும்.
மஹாலட்சுமியின் அருளை பெறுவதற்கு ஒருவர் சிறிய வெள்ளை பருத்தி துணியை சுத்தம் செய்து அதனை பன்னீரில் நனைத்து திரி செய்து விளக்கேற்றி வரலாம். இவ்வாறு தொடர்ந்து செய்வதால் நீங்கள் லட்சுமியின் அருளை பெறுவது மட்டுமின்றி மன நிறைவையும் வாழ்வில் பெற முடியும்.
மஞ்சளில் குழைத்து திரியிடுவதால் திருமண தடைகள் ஏதுமிருப்பின் தீரும். தாமரை தண்டில் திரி செய்து விளக்கேற்றினால் முன் ஜென்ம கர்மவினைகள் தீரும் என்பது நம்பிக்கை.