வீட்டில் கண்ணாடி உடைந்தால் என்ன அர்த்தம்? வாஸ்து சாஸ்திரம் சொல்வதென்ன?
By : Kanaga Thooriga
வீட்டின் அலங்கார பொருள் என்பதை தாண்டி முகம் பார்க்கும் நிலைக்கண்ணாடி என்பது வாஸ்து சாஸ்திரத்தில் முக்கியமான அம்சமாக கருதப்படுகிறது. அதாவது யார் வேண்டுமானலும் பொய் சொல்லலாம் பொய்யே சொல்லாத சிலவற்றில் முக்கியமானது நிலைக்கண்ணாடி. அது உண்மையை மட்டுமே பிரதிப்பலிக்கிறது. எதையும் மறைப்பதில்லை.
அதுமட்டுமின்றி கண்ணாடிக்கு நேர்மறை மற்றும் எதிர்மறை ஆற்றலை பிரதிபலிக்கும் தன்மை உண்டு. எனவே தான் அதை வீட்டில் வைக்கிற போது முறையான திசையில் வைப்பதை பரிந்துரைக்கிறது வாஸ்து சாஸ்திரம். வாஸ்து சாஸ்திரத்தின் படி வீட்டிற்கான கண்ணாடியை தேர்வு செய்யும் போது சதுரம், செவ்வக வடிவங்களை தேர்வு செய்யலாம். வட்டம், முக்கோணம் இவற்றை தவிர்ப்பது நல்லது.
அடுத்து, கண்ணாடியை வைக்க கூடிய இடம் நல்ல வெளிச்சம் நிறைந்த இடமாக இருக்குமாறு பார்த்து கொள்ளுங்கள். காரணம் இருள் நிறைந்த இடத்தில் கண்ணாடி இருந்தால் அதுவே ஒருவகையான எதிர்மறை அதிர்வுகளை உருவாக்கும். கண்ணாடிக்கு எதிர்மறை ஆற்றலை பிடித்து வைக்கும் தன்மை உண்டு என்று சொல்லப்படுகிறது. சில நேரங்களில் வீடுகளில் கண்ணாடி உடைந்தால் திருஷ்டியால் உடைந்தது. இனி வீட்டிலுள்ள தீய சக்திகள் அனைத்தும் விலகி விடும் என பெரியோர் சொல்வதை நாம் கேட்டிருக்கலாம். காரணம் அதற்கு எதிர்மறை தன்மையை ஈர்த்து வைத்து கொள்ளும் தன்மை உண்டு.
வீட்டின் வாசலில் ஒரு சிலர் கண்ணாடி வைத்திருப்பதை பார்க்கலாம். காரணம் யாரொருவர் எந்த எண்ணத்தோடு வீட்டினை பார்க்கிறார்களோ அதுவே அவர்களுக்கு திரும்ப கிடைக்கிறது என்பதே இதன் தார்பரியம். நல்ல மனதோடு பார்த்தால் நல்லதும், தீய எண்ணத்தோடு பார்த்தால் தீமையும் பார்க்கும் கண்களுக்கு ஏற்ப வினைகளும் அவரை சேரும் என்பதே கண்ணாடியை வீட்டின் முன் வைக்கும் தத்துவம்.
பணம் வைக்க கூடிய வடக்கு திசையில் கண்ணாடியை வைப்பதால், மற்றும் பணம் வைக்கும் பகுதியில் கண்ணாடியை வைப்பதும் இதனால் தான். இவ்வாறு வைப்பதால் பணத்தின் பிரதிபலிப்பு அதன் பெருக்கத்தை கூட்டும் என நம்பப்படுகிறது. அதுமட்டுமின்றி இலட்சுமியின் அம்சம் நிலைக்கண்ணாடி அதனால் தான் அது மங்களகரமான பொருளாக கருதப்படுகிறது. கலசங்களில் கூட கண்ணாடியை வைக்கும் மரபும் நம்மிடையே உருவானது. கண்ணாடியை படுக்கைக்கு நேராக மட்டும் வைக்க வேண்டான் என வாஸ்து சாஸ்திரம் சொல்கிறது.