Kathir News
Begin typing your search above and press return to search.

ஸ்ரீராம நவமி: இன்றைய தினம் ராம நாமம் சொல்வதால் ஏற்படும் பெரிய பலன்கள்!

ஸ்ரீ ராமநவமி நாளில் ராமநாமம் சொல்வதால் ஏற்படும் பலன்கள்.

ஸ்ரீராம நவமி: இன்றைய தினம் ராம நாமம் சொல்வதால் ஏற்படும் பெரிய பலன்கள்!
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  10 April 2022 1:58 AM GMT

ராமர் இந்த பூவுலகில் பிறந்த நாளைத்தான் நாம் ராமநவமி விழாவாக கொண்டாடுகிறோம். பங்குனி மாதம், புனர்பூச நட்சத்திரமும், சுக்லபட்ச நவமி திதியும் கூடிய திருநாள் ஸ்ரீ ராமனின் பிறந்த நாள். இந்தியாவில் உள்ள பல்வேறு ராமர் கோவில்களில் இந்த விழா சிறப்பாக நடைபெறும் என்பதும் குறிப்பிடத்தக்கது. மகா விஷ்ணுவின் பத்து அவதாரங்களில் ஸ்ரீராம அவதாரமும், ஸ்ரீகிருஷ்ண அவதாரமும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. தமிழகத்தில் உள்ள பெருமாள் ஆலயங்களில் ராம நவமி பிரம்மோற்சவங்கள் நடைபெற்று வருகின்றன.


ராம நவமியில் ராமனுக்கு நைவேத்தியமாக நீர்மோர் படைப்பது மிக முக்கியமாகும். ராஜரிஷி விசுவாமித்திரருடன் இருந்தபோதும், அதன்பின், பதினான்கு ஆண்டுகள் வனவாசத்தின்போதும், ராமபிரான் நீர்மோரையும், பானகத்தையும் தாக சாந்திக்காக அருந்தினார். அதன் நினைவாகவே, நீர்மோரும், பானகமும் ஸ்ரீ ராமனின் அவதார தினமான ஸ்ரீ ராம நவமி அன்று நிவேதனப் பொருட்களாகப் படைக்கப்படுகின்றன.


ராமர் பட்டாபிஷேக படத்தின் முன்பாக வாழைப்பழம், பால் போன்ற எளிய பொருட்களை அர்ப்பணித்தும், ஸ்ரீ ராம நாமம் சொல்லியும் ஸ்ரீ ராமனை வணங்கி அருள் பெறலாம். ஆலயத்திலும் சரி, இல்லத்திலும் சரி, பூஜையின்போது, ராமபிரானை வணங்கியபிறகு, பூஜையில் கலந்துகொள்ளும் பெரியோர்களையும், ராம பக்தர்களையும்கூட வணங்கி அவர்களின் ஆசிர்வாதத்தைப் பெற வேண்டும். ராம நவமியன்று, ராம நாமம் உச்சரிக்கப்படும் இடங்களிலும், இராமாயணம் படிக்கப்படும். எனவே ராமநாமம் சொல்வதால் இந்த வருடம் முழுவதும் உங்களுக்கு நல்ல ஒரு புதிய உற்சாகத்தை ஏற்படுத்தி கொடுக்கிறது.

Input & Image courtesy: Oneindia News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News