Kathir News
Begin typing your search above and press return to search.

அரிசியுடன் இந்த பொருளை வைத்து தானம் வழங்கினால் பலன்கள் இரட்டிப்பாகும்!

அரிசியுடன் இந்த பொருளை வைத்து தானம் வழங்கினால் பலன்கள் இரட்டிப்பாகும்!

Kanaga ThoorigaBy : Kanaga Thooriga

  |  27 July 2022 12:38 AM GMT

நம் ஆன்மீகமும் அறிவியலும் ஒன்றுடன் ஒன்று இசைந்து இருப்பதே ஆகும். இதனை நாம் பலவாறு உணர்ந்து கொள்ளலாம் என்றாலும். அதில் முக்கியமான்ஒன்று தானம் அளிப்பது. தானம் அளிப்பதன் முக்கிய அம்சம் நியூட்டனின் விதி எனலாம். ஒவ்வொரு வினைக்கும் சரிசமான அல்லது எதிர்மறையான தாக்கம் இருக்கும் என்பார். நீங்கள் எதை அளிக்கிறீர்களோ அது பன்மடங்காக திரும்ப வரும் என்பது நம்பிக்கை. அது அன்பாக, மரியாதையாக, நன்றியாக, பணமாக உணவாக ஏதுவாகவும் இருக்கலாம்.

எனில் இந்த தானத்தை செய்கிற போது நாம் நினைவில் கொள்ள சில விஷயங்கள் உண்டு. தானியம், நீர், ஆடை ,அமரும் ஆசனம், பசுவுக்கு அல்லது குதிரைக்கு உணவு ஆகியவற்றை தானமளித்தால் எதிரியை கூட நண்பராக மாற்றும் வல்லமை அந்த தானத்திற்கு உண்டென்கிறது சாஸ்திரம். மேலும் இறப்புக்கு பின்பான முக்திக்கு இவை வழிவகுக்கும்.

மேலும் உதவி தேவைபடுவோரை நம் வீட்டிற்கு அல்லது நாம் இருக்கும் இடத்திற்கு வரவழைத்து வழங்குவதை காட்டிலும், உதவி தேவைபடுவோரை நாம் தேடி சென்று உதவுவதே நமக்கு நன்மை பயக்கும். மேலும் பசுவுக்கு, அந்தணருக்கு மற்றும் மருத்துவ உதவி தேவைப்படும் நோயாளிக்கு உதவு ஒரு நபரை யாரேனும் ஏதேனும் காரணம் சொல்லி தடுத்தால் அவர்கள் கடுமையான கர்ம வினைக்கு ஆட்படுவார்கள் என்பது கூற்று.

மேலும் எள்ளு, நீர் மற்றும் அரிசி ஆகிய தானத்தை பாத்திரத்தில் வைத்து வழங்காமல், கைகளால் வழங்க வேண்டும். பெரிய அளவிலான பொருட்களை முழுமையாக கைகளால் வழங்குவது நடைமுறைக்கு சாத்தியமில்லை என்றாலும், சாஸ்திரத்திற்காக முதலில் சிறிய அளவை நம் கைகளாலேயே வழங்க வேண்டும்.

தானம் வழங்குகிற போது ஒருவர் கிழக்கிலும், தானம் பெறுகிற போது ஒருவர் வடக்கு புறத்திலும் நின்று பெறுவது சிறப்பு. அடுத்ததாக எப்போதெல்லாம் நீங்கள் அரிசியை தானம் வழங்குகிறீர்களோ அப்போதெல்லாம் சிறிது எள்ளையும் அதனுடன் வைத்து தானம் வழங்க கிடைக்கும் நன்மைகள் இரட்டிப்பாகும் என்பது நம்பிக்கை.

இருப்பதிலேயே மிகவும் புனிதமானதும், மிகவும் பெரிதான தானமாக கருதபடுவது பசு தானம். பசுவிற்கு உணவளிப்பதன் மூலம் பலவிதமான தானங்களை அளித்த பலன் ஒரு சேர ஒருவருக்கு கிடைக்கும். ஏழைகளுக்கு, ஆதரவற்றோருக்கு, நோயுற்றோருக்கு அளிக்கப்படும் தானத்தை மகாதானம் என்று அழைக்கின்றனர்.

கடலில் இடும் எதுவும் திரும்ப வந்துவிடும் என்கிர பழமொழியை போல தான் தானமும். நாம் அளிக்கும் எந்தவொரு தானமும் கவனிக்கப்படாமல் போகாது. இந்த பிரபஞ்சத்திற்கு நாம் அளிக்கும் எதுவும் நமக்கு ஏதோவொரு வகையில் திரும்ப வந்தே தீரும் என்பதில் நம்பிக்கை கொள்வோம்.



Next Story
கதிர் தொகுப்பு
Trending News