Kathir News
Begin typing your search above and press return to search.

தடையில்லா நன்மையை அருளும் தைப்பூச திருநாள் இன்று! வழிபட வேண்டிய நேரம் எது?

தடையில்லா நன்மையை அருளும் தைப்பூச திருநாள் இன்று! வழிபட வேண்டிய நேரம் எது?

Kanaga ThoorigaBy : Kanaga Thooriga

  |  5 Feb 2023 12:01 AM GMT

தைப்பூசம் என்பது நமது மரபில் முக்கிய நாளாகும். தை மாதத்தில் வருகிற பெளர்ணமியை ஒட்டி வரும் பூசம் நட்சத்திரத்தை தைப்பூசம் என கொண்டாடுகிறோம். இந்துக்கள் பெரும்பாலும் வாழக்கூடிய நாடுகளான சிங்கப்பூர், மலேசியா, இலங்கை மற்றும் மொரிஷியஸ் போன்ற நாடுகளில் இந்த விழா பெரும் விமர்சையாக கொண்டாடப்படுகிறது. அதுமட்டுமின்றி தமிழகம் மற்றும் ஒரு சில நாடுகளான மலேசியா, இலங்கை, மொரிஷியஸ், ஆகிய இடங்களில் இவ்விழா அன்று அரசு விடுமுறையும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தைப்பூசம் என்பது முருகனுக்கு உகந்த நாளாக கொண்டாடுவது வழக்கம். முருகபெருமான் குடுகொண்டுள்ள திருத்தலங்கள் அனைத்தும் தைப்பூசத்தில் கோலாகலமாக இருப்பதை காண முடியும். தைப்பூசத்திற்கு முருகபெருமானுக்கு வணங்கும் காரணம் யாதெனில், உலகத்தோரை துன்புறுத்தி வந்த அரக்கனான சூரபத்மனை அழிக்க முருகபெருமான் அவதாரம் கண்ட போது. சுரபத்மனை அழிக்க கிளம்பிய முருகபெருமானுக்கு தன்னுடைய பராசக்தி தன்னுடைய சக்தி வேலை கொடுத்த தினம் இன்று.

தீமையை அழிக்க முக்கிய காரணமாக இருந்த சக்தி வேலை வழங்கியது தைப்பூசத்தன்று என்பதால் இந்த நாள் முருகன் திருத்தலங்களில் பெரும் விமர்சையாக கொண்டாடப்படுகிறது. அதுமட்டுமின்றி ஏராளமான முருகன் கோவில்களுக்கு பக்தர்கள் பாத யாத்திரையாக செல்வதை நாம் காண முடியும். முருகன் கோவிலுக்கு நடந்து செல்வதால் தீராத வினையும் தீரும் என்பது நம்பிக்கை.

அதுமட்டுமின்றி பால் காவடி, பன்னீர் காவடி, சந்தன காவடி என காவடிகள் சுமந்து விரதம் இருந்து தங்கள் நேர்த்தி கடனை பக்தர்கள் இந்த தைப்பூசத்திருநாளில் செலுத்துவது வழக்கம். பழநி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்சோலை, திருச்செந்தூர் மற்றும் திருப்பரங்குன்றம் ஆகிய அறுபடை வீடுகளிலும் மற்றும் அனைத்து முருகன் கோவில்களிலும் இலட்சக்கணக்கான பக்தர்கள் முருகனை தரிசித்து வணங்குவது வழக்கம். தீமை அழிக்க முனைந்த தினம் இன்று என்பதால், பக்தர்கள் மருகி மால் மருகனை தைப்பூசத்தன்று வணங்குகிற போது அவர்களின் தீராத வினையும் தீரும், தீய கர்ம வினைகள் நீங்கும் என்பது ஐதீகம்.

இந்த ஆண்டு தைப்பூசம் அன்று பூச நட்சத்திரமும் பெளர்ணமியும் இணைந்து வரும் உதயாத் காலமாக கருதப்படுவது 4 ஆம் தேதி இரவு 10.40மணிக்கு மேல் 5 ஆம் தேதி பகல் 1.14 வரை தைப்பூசம் என கணக்கில் கொள்ளலாம். இந்த நேரத்தில் தைப்பூச வழிபாடு செய்வது உகந்ததாகும். கதிர் வாசகர்கள அனைவருக்கும் தைப்பூச திருவிழா நல்வாழ்த்துகள்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News