Kathir News
Begin typing your search above and press return to search.

கோள்களின் பிடியிலிருந்து தப்பி இன்புற்று வாழ இவற்றை செய்தால் போதும்!

கோள்களின் பிடியிலிருந்து தப்பி இன்புற்று வாழ இவற்றை செய்தால் போதும்!

Kanaga ThoorigaBy : Kanaga Thooriga

  |  29 July 2022 1:37 AM GMT

சில நேரங்களில் வாழ்க்கை காரணமே இன்றி நம்மிடம் கடுமையாக நடந்து கொள்ளும். எதிர்பார்த்த பதவி உயர்வு காரணமே இன்றி தவறி போகும். சிறிய கால் இடறல் என நாம் நினைத்தது பெரிய சிகிச்சைகள் வரை நம்மை அழைத்து செல்லும். நம் அன்புக்குரியவர்களிடம் தேவையற்ற மனப் பிசகு ஏற்படும். வாழ்க்கை இது போலத்தான் எதிர்பாராமல் பல திருப்பங்களை நிகழ்த்தும்.

இது போன்ற இடர்களுக்கும் எதிர்பாரா திருப்பங்களுக்கும் நம் இந்து மரபில் கோள்களின் தாக்கத்தை ஒரு காரணமாக சொல்வதுண்டு. நம்மிடம் பல இலட்சம் மைல்களுக்கு அப்பால் இருக்கும் கோள்களின் இருப்பு நம் வாழ்வின் நிகழ்வுகளை மாற்றியமைக்கும் வல்லமை படைத்தவை என்பது தான் ஆச்சர்யத்திலும் ஆச்சர்யம். எப்போது நமக்குரிய கோள்கள் பலவீனமாக இருக்கிறதோ நமக்கு எதிர்மறையாக இருக்க வேண்டிய கோள்கள் பலமாக இருக்கிறதோ அப்போது நாம் தொடர் இன்னல்களை சந்திக்க நேரலாம்.

இதற்கு ஜோதிடத்தில் பல பரிகாரங்கள் சொல்லப்பட்டுள்ளன. ஒரு சிலர் சில தொடர்ச்சியான பூஜைகள், சடங்குகள் அல்லது யாகங்களை கூட பரிந்துரைப்பார்கள். ஆனால் அவற்றை எல்லாம் எல்லா தரப்பு மக்களாலும் செய்ய முடியுமா என்பது கேள்வி குறி. எனவே வீட்டிலேயே செய்யக்கூடிய சில தொடர்ச்சியான சடங்குகளால் கோள்களின் பிரச்சனையில் இருந்து நாம் விடுபட முடியும் என்கிறது சாஸ்திரம்.

சூரியனின் தாக்கத்தில் இருந்து ஒருவர் தன்னை விடுவித்து கொள்ள, தினமும் சில மணித்துளிகள் சூரிய ஒளியில் அமர்ந்து தியானிக்க வேண்டும். பின்பு உணவினை சூரியனின் இருப்பின் போது உண்ணுமாறு பார்த்து கொள்ள வேண்டும். பெரும்பாலும் செம்பு பாத்திரத்தில் நீரை வைத்து அருந்த வேண்டும்.

சந்திரனின் தாக்கத்தில் இருந்து தப்ப, ஒருபோதும் நீரை அவமானப்படுத்தாது இருத்தல் வேண்டும். நீர் நிலைகளுக்கு செல்ல நேர்ந்தால் முதலில் நீரை காலால் தீண்டாமல், கைகளில் முதலில் ஸ்பரிசித்து பின் அதில் இறங்க வேண்டும்.

செவ்வாயை பலப்படுத்த, முடிந்த அளவு தரையில் படுத்துறங்குதல் நலம். வாரத்தில் ஒரு நாள் உப்பற்ற உணவை உட்கொள்ளலாம். மேலும் அனுமரின் நாமத்தை தொடர்ந்து சொல்லுவதன்ன் மூலம் செவ்வாய் கோளை பலப்படுத்தலாம்.

சனியின் தாக்கத்திலிருந்து விடுபட அனுமரின் நாமத்தை தொடர்ந்து சொல்ல வேண்டும். மேலும் தானம், தர்மம் போன்ற நல்ல காரியங்களில் ஈடுபடுவதன் மூலம் நல்ல பலன்களை நாம் பெற முடியும். அருகிலுள்ள கோவிலில் இருக்கும் சனி பகவானை தரிசித்து எள்ளு மற்றும் எண்ணையை அர்பணித்து வர சனியின் தாக்கத்தால் நேர்ந்த இடர்கள் விலகும்.

ராகு கேதுவால் பிரச்சனை எனில், பிறருக்கு மருத்துவ உதவிகள் மற்றும் சேவைகளை செய்து வந்தால் நல்ல பலன்களை நாம் காணலாம். மேலும் தினசரி அதிகாலை நீராடி துளசியை வணங்கி அதன் ஒரு சில இலைகளை உண்டு வர பிரச்சனைகளின் தீவிரம் குறையும்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News