முருக பெருமானின் ஆறுமுகம் அருளும் நன்மைகள்! நக்கீரர் சொல்லும் உண்மை!
By : Kanaga Thooriga
தாரகாசுரன் என்கிர அரக்கன் பிரம்ம தேவரின் தான் சிவபெருமானின் மகன் கையால் தான் இறப்பேன் என்ற வரம் வாங்கினான். அந்த வரத்திற்கு பின் ஆணவத்தோடு அவன் நடந்து கொண்டதில் தேவர்கள் எல்லாம் கலங்கி போனார்கள். தேவாதி தேவர்களும் அரக்கர்களின் அடிமைகளாக மாறினார்.
இந்த நிலையிலிருந்து மீள ஒட்டு மொத்த தேவலோகமும் சிவபெருமானின் அருளை நாடியது. அசுரனை அழிப்பதற்காக சிவபெருமான் தன்னுடைய நெற்றி கனலில் இருந்து ஒளி பிழம்பினை தோன்ற செய்தார். அந்த ஒளிபிளம்பானது புனித கங்கை நதிக்கரையில் விழுந்தது, அந்த ஒளி பிழம்பினை கங்கையானவள் சரவண பொய்கைக்கு ஏந்தி சென்றாள் சேர்த்தாள். அங்கே மலர்ந்திருந்த தாமரை மலர் கூட்டத்தில் ஆறு மலர்களில் ஆறு குழந்தைகளாக அந்த ஒளி பிழம்பு மலர்ந்தது. அந்த ஆறு குழந்தைகளையும் ஒரே குழந்தையாக மாற்றினால் தேவி பார்வதி. ஆறு முகத்துடன் ஓர் உடலுடன் ஆறுமுகனாக முருகர் தோன்றினார்.
இந்த கதை அனைவரும் அறிந்ததே. இதில் ஆச்சர்யம் என்னவெனில், முருகனின் படைப்பு என்பது பஞ்ச பூத தத்துவத்தினையும் அடிப்படையாக கொண்டது. அதாவது சிவபெருமானின் நெற்றிக்கண் என்பது ஆகயாத்தை குறிக்கிறது. அதிலிருந்து தோன்றிய தீப்பிழம்பு நெருப்பையும், அந்த தீப்பிழம்பை கங்கைக்கு கொண்டு சேர்த்த காற்று வாயுவையும் குறிக்கிறது. மேலும் கங்கை தாயும் அவள் அந்த தீப்பிழம்பை கொண்டு சேர்த்த சரவணபொய்கையும் நீரையும் குறிக்கிறது. சேற்றிலிருந்து மலர்ந்த செந்தாமரையில் முருக பெருமான் தோன்றியது பூமியை குறிக்கிறது இவ்வாறாக பஞ்ச பூத தத்துவத்தில் பிறந்த ஆறுமுகன் சக்தி தேவியாகிய பார்வதியின் மெய்ஞானத்தோடு இணைந்து உருவானவர் முருக பெருமான்.
மேலும் முருக பெருமானின் ஆறுமுகம் குறித்து திருமுருகாற்றுப்படையில் நக்கீர பெருமான் பாடுகையில், கந்தனின் முதல் முகம் ஒருவரின் ஆன்மீக சார்ந்த அறியாமையை அழிக்கும் என்கிறார்.
கதிர்வேலனின் இரண்டாம் முகம், தர்மத்தின் வழி நடக்கும் முருக பெருமானின் பக்தர்கள் வேண்டும் வரத்தை நல்குகிறது என்கிறார்.
கார்த்திகேயனின் மூன்றாம் முகம், வழிபாட்டின் மூலம் தன்னை வந்தடையும் பக்தர்களின் கவலைகளை போக்கி அவர்களை பாதுகாக்கிறது என்கிறார்.
வேலவனின் நான்காம் முகம், பிரணவ மந்திரத்தின் உண்மையை தேடி செல்வோருக்கு உற்ற துணை நிற்கும் என்கிறார்
மருகப்பெருமானின் ஐந்தாம் முகம், அதர்மம் செய்வோரை அழிக்கும் என்கிறார்
சரவண மூர்த்தியின் ஆறாம் முகம் வள்ளியை நோக்கி திரும்பியிருக்கும் இம்முகம், ஒருவரின் அறிவை, வாழ்வின் நோக்கத்தை கூர்மைப்படுத்துகிறது என்கிறார்.