ஆமை உருவத்தை வீடுகளை வைக்கலாமா கூடாதா? என்ன சொல்கிறது சாஸ்திரம்!
By : G Pradeep
சொர்கமும் பூமியும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையது. இந்த தத்துவத்தின் குறியீடாக சொல்லப்படும் பிராணி ஆமை. ஆமையின் ஓடு சொர்கத்தின் அடையாளமாகவும், ஆதன் கீழுள்ள உடல் பூமியின் அடையாளமாக கருதபடுகிறது.
ஆமை வீட்டிற்குள் நுழையக்கூடாது என சொல்லும் பழமொழி ஒருபுறம் இருக்க.. ஆமை உருவத்தை வீட்டில் வைப்பது நல்லது என்று ஒரு கூற்றும் உண்டு. ஆமைகளின் வாழ்நாள் மிகவும் நீண்டது என்பதால் ஆமையின் உருவத்தை வீட்டில் வைப்பதால் வீட்டில் உள்ளவர்களின் ஆயுள்காலம் அதிகரிக்கும் என்பது நம்பிக்கை.
மேலும் ஆமையின் உருவை வீட்டில் வைப்பதால் போதுமான வளமும், மன அமைதியும் கிடைக்கிறது. உலோகத்தால் ஆன ஆமை உருவத்தை நீர் நிரம்பிய கிண்ணத்தில் வைத்து வடக்கு திசை நோக்கி வைத்தால் வளம் பெருகும்.
ஆமை உருவத்தை எந்த காரணத்திற்காகவும் படுக்கை அறையில் வைக்கக்கூடாது என்கிறது சாஸ்திரம். மேலும் இது தரும் நன்மையின் காரணமாக சிலர் ஆமை உருவம் பதித்த மோதிரத்தை விரல்களில் அணிவதும் இன்று வழக்கமாக இருக்கிறது.
கற்பனைத்திறனின், திடத்தின் , உறுதியின் அடையாளமாக ஆமை கருதப்படுகிறது. மேலும் ஆமைகள் குறித்து நமக்க்கு கிடைக்கப்பெறும் மற்றொரு முக்கிய குறிப்பு. உதயகிரி குகைகளில் யமுனா தேவியின் சிலை வடிக்கப்பட்டுள்ளது. அசோகா மரத்தின் கீழ் யமுனா தேவி நின்ற கோலத்தில் இருக்கும் சிலையில் அவருடைய வாகனமாக ஆமை செதுக்கப்பட்டுள்ளது.
இந்து கலாச்சாரம் மட்டுமின்றி உலகின் பல்வேறு கலாச்சாரத்திலும் குறிப்பாக தைய்வான், சீனா, ஜப்பான் போன்ற நாட்டின் கலாச்சாரத்திலும் ஒவ்வொரு விதமான அர்த்தத்தில் ஆமைகள் அணுகப்படுகின்றன.
ஒரு சிலரின் தவறான கர்மாக்களில் இருந்து விடுபட ஆமை உருவம் உதவும். இந்த உருவத்தை வீட்டில் வைப்பதன் மூலம் தவறான ஆற்றல் தடுக்கப்படும். ஆமையை வீட்டிற்குள் வைக்க கூடாது என சொல்லப்படுவதன் முக்கிய காரணம் . அதன் புனிதத்தன்மை என்கிற கருத்தும் நிலவுகிறது.
அதாவது தன்னுடைய பத்து அவதாரங்களில் ஒரு அவதாரமாக விஷ்ணு ஆமை வடிவை எடுத்ததால் இவற்றை பெரும்பாலும் செல்ல பிராணையாக வளர்ப்பதை மக்கள் தவிர்க்கின்றனர்.