Kathir News
Begin typing your search above and press return to search.

பெண்களின் பட்டுப் போகாத பிறந்த பாசம் பற்றிய ருசிகர தகவல்கள்.!

பெண்களின் பட்டுப் போகாத பிறந்த பாசம் பற்றிய ருசிகர தகவல்கள்.!

பெண்களின் பட்டுப் போகாத பிறந்த பாசம் பற்றிய ருசிகர தகவல்கள்.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  23 Oct 2020 4:32 PM GMT

பெண்களிடம் பாசம் காட்டுவதில் தான் சமூக பண்பாடு உறுதி செய்யப்படுகிறது. பாசம் காட்டும் இந்த பண்பாடு ஒவ்வொரு குடும்பத்திலும் இருந்து தொடங்குகிறது. பெண்கள் திருமணமாகி கணவர் வீட்டிற்கு சென்ற பிறகும் பிறந்த வீட்டினர் அவளை மறக்காமல் இருப்பதுதான் தமிழகத்தின் சமூக பண்பாடு. அனைத்து விசேஷங்களுக்கும் அவளை பிறந்த வீட்டிற்கு அழைத்து வருகிறார்கள். திருமணமாகி சென்றாலும், பெண்களுக்கு குடும்பம் ஆதரவாக இருக்கிறது என்பதை அவளின் கணவர் வீட்டிற்கு புரியவைக்கும் வகையில் இந்தப் பண்பாடு அமைகிறது. அது அந்த பெண்ணிற்கு தன்னம்பிக்கையையும், தைரியத்தையும் அளிக்கும்.


திருமணம், வளைகாப்பு, குழந்தை பிறப்பு, காதுகுத்து, மஞ்சள் நீராட்டி என அடுத்தடுத்து நடைபெறும் அனைத்து விஷயங்களிலும் பிறந்த வீட்டின் சொந்தங்கள் அவளோடு கூடி மகிழ்கிறார்கள். அதற்கு ஏற்றார் போல் பெண்களும் உடன் பிறந்த அண்ணன், தம்பிகளை கணவரிடமோ அல்லது கணவர் வீட்டாரிடமும் ஒருபோதும் விட்டுக் கொடுப்பதில்லை.



குடும்ப உறவுகளை தாய்மாமன் உறவு என்பது ஆழமானது. அது குழந்தையின் தாயை பொருத்தே அமையும் இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு குழந்தைக்கு தொட்டில் கட்டும் வழக்கம். இப்போதெல்லாம் மரத்தில் தொட்டில் என பலவகை தொட்டில்கள் வந்துவிட்டன. முன்பெல்லாம் வெள்ளைக் கயிறு பல வண்ணங்களுடன் கூடிய தொட்டில் கம்பு வெள்ளை வேட்டியில் கட்டப்படும் அதிகம். இப்போது இதை பல இடங்களில் காண முடியும். இதுதான் குழந்தைகளுக்கும் தாய்க்கும் இடையேயான பந்தம் தொடங்குகிறது. சகோதரி பிறக்கும் குழந்தையின் தாய்மாமன் தொட்டில் வாங்கி கொடுக்க வேண்டும். இதை ஒரு சம்பிரதாயமாக இல்லாமல் உறவை பலப்படுத்த ஏற்படுத்திய யுத்தி என்றே சொல்லலாம்.

சகோதரி தனக்கு கொடுத்த அன்பும், மரியாதையும் அந்த குழந்தை மீது கடைசிவரை தாய்மாமன் வைத்திருக்க வேண்டும். ஒரு தொட்டியில் உருவாக்கும் இந்த பந்தம் இந்த குழந்தையின் காலம் வரை நீடிக்கும். குடும்ப உறவுகள் விலகி, விடாமல் காலம் காலமாக தொடர வேண்டும் என்பதற்காகவே இந்த சில சம்பிரதாயங்களை முன்னோர்கள் வகுத்துள்ளனர்.
Next Story
கதிர் தொகுப்பு
Trending News