Kathir News
Begin typing your search above and press return to search.

மாலையில் நகம் வெட்ட கூடாதென்பது மூடநம்பிக்கையா? இல்லை என அடித்து சொல்லும் அறிவியல்!

மாலையில் நகம் வெட்ட கூடாதென்பது மூடநம்பிக்கையா? இல்லை என அடித்து சொல்லும் அறிவியல்!
X

Kanaga ThoorigaBy : Kanaga Thooriga

  |  23 Nov 2021 12:30 AM GMT

நகம் வெட்டுவது உடல் தூய்மையில் முக்கியமானது. ஆரோக்கியமான பழக்கம். கிருமிகள் இதர அசுத்தங்களில் இருந்து நம்மை பாதுகாக்க உதவும் ஒரு செயல். ஆனால் நம் மரபில், நகத்தை மாலை நேரத்தில் வெட்டக்கூடாது என்கிறார்களே ஏன்?

இது வெறும் மூடநம்பிக்கையா அல்லது இதற்கு பின் ஏதேனும் அறிவார்ந்த காரணங்கள் உண்டா என ஆராய்ந்த போது. இதற்கு காரணமாக சொல்லப்படும் ஒரு சில காரணங்களை இங்கே தொகுத்துள்ளோம்.

முந்தைய காலத்தில் மின்சார வசதி இல்லை. சூரியவொளி ஒன்றே அவர்களின் வெளிச்சத்திற்கான முக்கிய ஆதாரமாக இருந்தது. எனவே இருளில் நகத்தை வெட்டுவதால் கை விரல்களை நாம் காயப்படுத்தி கொள்ள கூடும் மற்றும் அந்த நகத்துண்டுகள் வீடுகளில் தவறி விழுந்து விட்டால் அவற்றை அப்புறப்படுத்துவது மிகவும் கடினமான ஒன்றாகிவிடும். அவை உணவிலோ மற்ற நீரிலோ விழுந்து விட்டால் அவை சுகாதார கேடு விளைவிக்கும். எனவே இரவில் அல்லது மாலை நேரத்தில் நகம் வெட்டுவதை தவிர்க்க வேண்டும் என்றனர்.

அடுத்து, முந்தைய காலத்தில் இன்று இருப்பது போல நகம் வெட்டுவதற்கென பிரத்யேக சாதனம் இருக்கவில்லை. கத்தி போன்ற மிகவும் கூர்மையான பொருட்களை கொண்டே நகத்தை நறுக்கி வந்தனர். அதனால் ஏற்படும் காயங்கள் பெரும் விளைவை என்பதால் கூட இப்படியொரு பழக்கம் இருந்திருக்கலாம்.

மூன்றாவதாக, நம் மரபில் ஒவ்வொரு நாளிற்கும், ஒவ்வொரு நேரத்திற்கும் ஒரு தெய்வம் அல்லது தேவதையின் ஆதிக்கம் இருப்பதாக நம்பப்படுகிறது. திங்கள் சிவபெருமானுக்கு உகந்தது சனிக்கிழமை விஷ்ணுவிற்கும், சனி பெருமானுக்கும் உகந்தது, செவ்வாய் வெள்ளி அம்பிகைக்கு உகந்தது என்பதை போல, மாலை நேரம் என்பது இலட்சுமி தேவியின் வருகைக்கான நேரம் என்பது ஐதீகம். அதனாலேயே மாலையில் வீடு பெருக்குவது, மாலையில் தலை வாறுவது, ஏதேனும் பொருட்களை கடனாக அளிப்பது போன்றவைகளுக்கு சில கட்டுபாடுகள் விதிக்கப்பட்டன.. எனவே இலட்சுமி அருளும் வேளை என்பதால் மாலையில் நகம் வெட்டுவதை தவிர்க்க சொன்னார்கள்.

அதுமட்டுமின்றி தாந்திரீக சாஸ்திரத்தில் ஒருவர் அணியும் ஆடை, அவரின் தலை முடி மற்றும் நகம் ஆகியவை முக்கிய வஸ்துக்களாக கருதப்படுகிறது. எனவே ஆற்றல் ரீதியாக நாம் பாதுகாப்புடன் இருக்க நம் நகத்தை தவறான இடங்களில் தவறவிடக்கூடாது எனவே, அதனை முறைப்படி அப்புறப்படுத்த வேண்டியது அவசியம்.

Image : The Gaurdian

Next Story
கதிர் தொகுப்பு
Trending News