Kathir News
Begin typing your search above and press return to search.

2021 இல் உங்கள் ராசிக்கு புத்தாண்டு எப்படியிருக்க போகிறது?

2021 இல் உங்கள் ராசிக்கு புத்தாண்டு எப்படியிருக்க போகிறது?

2021 இல் உங்கள் ராசிக்கு புத்தாண்டு எப்படியிருக்க போகிறது?

Thoorigai KanagaBy : Thoorigai Kanaga

  |  1 Jan 2021 5:30 AM GMT

புத்தாண்டு பிறக்கிறது, புது வருடம், புது கனவு, புது வாய்ப்பு என நம்மை புதுப்பித்து கொள்ள காலம் கொடுக்கும் ஒரு வாய்ப்பு. கடந்த ஆண்டு நாம் கடந்து வந்த கடின பாதையை இறையருளுடன், முழு மன திடத்துடன் எதிர்கொண்டு கடக்க அனைவருக்கு புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

ஒரு ஆண்டு முழுவதும் நாம் செய்தவற்றை ஆண்டின் இறுதியில் அசை போடுவதும், ஆய்வு செய்வதும் இனி வரவிருக்கும் ஆண்டில் நாம் எவ்வாறு செயல் பட வேண்டும் என்கிற தெளிவை நமக்கு வழங்கும். அந்த வகையில் ஒரு தனிமனித வெற்றிக்கு முழு காரணம் அவருடைய தன்னம்பிக்கையும், விடாமுயற்சியும் தான். அதனோடு வெளிப்புற சூழல் எவ்வாறு அமைய இருக்கிறது என்கிற ஆரூடம் நமக்கு ஒரு வழிகாட்டியாக அமையும்.

அந்த வகையில் 2021 ஆம் ஆண்டு 12 இராசிகாரர்களுக்கும் எவ்வாறு அமையவிருக்கிறது என்கிற புத்தாண்டு இராசி பலன் கணிப்பு இங்கே.

மேஷ ராசி அன்பர்களுக்கு இந்த ஆண்டு யோகம் நிறைந்த ஆண்டாக இருக்க போகிறது. இத்தனை நாட்கள் அனுபவித்து வந்த துயரை துடைக்கும் ஆண்டாய் இந்த 2021 அமையவிருக்கிறது.

ரிஷப ராசிகாரர்களுக்கு அதிர்ஷ்டம் நிறைந்த ஆண்டாய் அமையப்போகிறது. இன்பமும், சவாலும் அதிகமாக நிகழும் என்றாலும், சவால்கள் அனைத்து சாதகமான சூழலாகவே மாறும் அமைப்பு கொண்ட ஆண்டாக 2021 விளங்கவிருக்கிறது.

மிதுன ராசிகாரர்களுக்கு ஏற்ற இறக்கங்கள் நிறைந்த சமநிலையான ஆண்டாக அமையும். சாமர்த்தியத்துடனும், வாய்ப்புகளை வசப்படுத்தும் பண்புடனும் நடந்து கொண்டால் சவால்களை சமாளிக்கும் ஆண்டாக 2021 அமையும்.

கடக ராசிகாரர்கள் பிடிவாதத்தை சற்று தளர்த்தி குடும்பத்தினருடன் இசைவாக செல்லவதால் நன்மைகள் பிறக்கும். வெற்றி நிச்சயம், ஆனால் அதனை சற்று போராட்டி பெற வேண்டிய சூழல் ஏற்படலாம். பொருளாதாரம் மேம்படும் காலம் இது.

சிம்ம ராசி அன்பர்கள், ஆண்டின் துவக்கம் சற்று நிதானமானதாக அமைந்தாலும், ஆண்டின் மத்தியில் நல்ல முன்னேற்றத்தை காண்பீர்கள். எதிரிகளை அடையாளம் கண்டு அவர்களின் மீது அதிக்கம் செலுத்தும் வாய்ப்பு இந்த ஆண்டில் உண்டு.

கன்னி ராசி அன்பர்களுக்கு, பொறுமையை கடைப்பிடிக்க வேண்டிய ஆண்டு இது. சில சறுக்கல்கள் வந்தாலும் மனம் தளராத உங்கள் தன்மையால் நம்பிகையுடன் எதிர்கொள்வீர்கள். எதிர்மறையான எண்ணங்கள் எழாமல் பார்த்து கொள்ள வேண்டும்.

துலா ராசிகாரர்கள் சிறிது கவனத்துடன் இருக்க வேண்டிய ஆண்டு. குடும்பத்தில் நண்பர் வட்டத்தில் எழும் பிரச்சனைகளை சற்று நிதானமாக கையாளுங்கள். பொருளாதாரத்தில் குறையேதும் நேராமல், சிறிது ஏற்ற இறக்கத்துடன் அமைந்தாலும் எதிர்பார்த்த பண வரவு அமையும் ஆண்டு இது.

விருச்சக ராசிகாரர்களுக்கு மன நிறைவான ஆண்டு இது. கடன் தொல்லைகள் நீங்கும். உங்கள் உழைப்பால் மட்டுமே வெற்றியை நிலை நாட்ட முடியும். வழக்கமாக உழைப்பதை காட்டிலும் இந்த ஆண்டில் அதீத சிரத்தை தேவை. குடும்பத்தினரின் ஆரோக்கியத்தில் சிறிது கவனம் தேவை.

தனுசு ராசிகாரர்கள் இத்தனை ஆண்டுகள் அனுபவித்து வந்த துன்பத்திலிருது விடுதலை பெறும் ஆண்டு. பல நல்ல வாய்ப்புகள் உங்களை நோக்கி வரவிருக்கிறது. பணியில் எதிர்பார்த்த உயர்வை பெறுவீர்கள். திடீர் நன்மைகள் எதிர்பார்க்கா திசையிலிருது நிகழும் வாய்ப்பு இந்த ஆண்டில் உண்டு.

மகர ராசிகாரர்களுக்கு வரவு அதிகரிக்கும் அதற்கு சமமான செலவுகளும் இருக்கும் ஆண்டு. திடீர் அதிர்ஷ்டம், பயண யோகம் போன்ற பல நல்ல வாய்ப்புகளும் இந்த ஆண்டு வழங்கயிருக்கிறது. தொழிலில் சிறிது கவனம் தேவை.

கும்ப ராசி அன்பர்கள், சுய தொழில் கூடி வரும் காலம் இது. வீட்டில் சற்று பிரச்சனைகள் இருந்தாலும், இணக்கமான சூழலை விரைவில் எட்ட முடியும். ஒரு சில பொருளாதார சிக்கல்கள் வந்தாலும், விடாமல் முயற்சி செய்யும் தன்மையினால் அனைத்து சவால்களையும் சமாளிப்பீர்கள்.

மீன ராசிகாரர்கள் அதிர்ஷ்டம் நிறைந்த ஆண்டு. எதிர்பார்க்காத திசையிலிருந்து யோகம் கூடி வரும். சொத்து பிரச்சனைகள் தீரும். வேலை, பணியிடத்தில் வருமானம் உயரும் வாய்ப்புகள் உண்டு . குடும்பம், தொழில் என அனைத்து தளத்திலும் நன்மையே நிறைந்திருக்கும் ஆண்டு 2021

Next Story
கதிர் தொகுப்பு
Trending News