Kathir News
Begin typing your search above and press return to search.

சனியின் தாக்கத்திலிருந்து விடுபட்டு அதிசய பலன் கிடைக்க, சிவனுக்கு இந்த இலையை அர்பணியுங்கள்.!

சனியின் தாக்கத்திலிருந்து விடுபட்டு அதிசய பலன் கிடைக்க, சிவனுக்கு இந்த இலையை அர்பணியுங்கள்.!

சனியின் தாக்கத்திலிருந்து விடுபட்டு அதிசய பலன் கிடைக்க, சிவனுக்கு இந்த இலையை அர்பணியுங்கள்.!

Thoorigai KanagaBy : Thoorigai Kanaga

  |  14 Dec 2020 5:30 AM GMT

முக்கண் ஈசனுக்கு மனமுவந்து நம் பக்தியை அர்பணித்தால் மட்டுமே போதுமானது. ஆனாலும் கூட சில பரிகாரங்களுக்காக, நவகிரங்கங்களின் பாதிப்புகளிலிருந்து விடுபடுவதற்காக பரிகார ரீதியாக சிவனுக்கு குறிப்பிட்ட விஷயங்களை அர்பணித்தால் மேலும் பல நன்மைகள் கூடுதலாக நிகழும்.

சிவார்ப்பணம் என்று சிந்தித்தாலே நம் நினைவுக்கு வருவது வில்வ இலையை சிவனுக்கு அர்பணிப்பது தான். வில்வ இலையுடன், குளிர்ந்த பாலை சிவனுக்கு அர்பணிப்பது நன்மையுள் நன்மை பயக்கும் செயல். ஆனாலும் அதனுடன், மேலும் சில இலைகளை சிவனுக்கு அர்பணிப்பது மேலும் உகந்ததாகும் .

ஸ்கந்த புராணத்தின் படி, மும்மூர்த்திகளான பிரம்ம தேவர் அரச மரத்தில் ( மரத்தின் வேராகவும்), விஷ்ணு பரமாத்மா ( மரத்தின் தண்டிலும்) மற்றும் சிவபெருமான் ( மரத்தின் இலையாகவும்) வசிக்கின்றனர் என்பது நம்பிக்கை. எனவே இந்த மரத்தின் இலையை சிவனுக்கு அர்பணிப்பது வில்வ இலையை அர்பணிப்பதற்கு ஒப்பானதாகும். சனி கிரகத்தால் ஏற்படவிருக்கும் விளைவிலிருந்து விடுபட, கோள்களின் தாக்கத்திலிருந்து தப்பிக்க சிவபெருமானுக்கு அரச மரத்து இலையை அர்பணிப்பது உகந்ததாகும் .

இந்து புராணத்தில் ஆல மரம் என்பது அழியாத்தன்மையின் அடையாளம் ஆகும். ஆனாலும் கூட திருமணம், குழந்தையின்மை போன்ற பரிகாரங்களுக்காக இந்த மரத்தை சுற்றி வருவதை பரிந்துரைப்பதில்லை. சிவபெருமான் ஆல மரத்தின் அடியில் அமர்ந்திருப்பதாக சில புராணங்கள் தெரிவிக்கின்றன. எனவே யாரொருவர் சிவபெருமானுக்கு ஆல மரத்தின் இலைகளை அர்பணிக்கின்றார்களோ அவர்களுக்கு நல்ல ஆயுள் பலம் கிடைப்பதாக சொல்லபடுகிறது.

இந்து மரபின் படி ஆன்மீக முக்கியத்துவங்கள் பெரும் மரங்களுள் முக்கியமானது அசோக மரம். நல்ல அதிர்வுகளை ஈர்க்கும் தன்மையுடையது என்பதால், வீட்டின் முகப்பில் கூட கட்டுவார்கள். இந்த இலையை சிவனுக்கு அர்பணிப்பதால், குழந்தையின்மை மற்றும் சமூகத்தில் புகழும் கிடைக்கும்.

அடுத்தது மாவிலை, இது யாகம் நடத்துகையில் மற்றும் வீட்டின் வாயிலில் தோரணமாக பயன்படுத்தப்படும் மகத்துவம் பொருந்திய இலையாகும். இதனை சிவனுக்கு அர்பணிப்பதால் வளமும், செல்வமும் பெருகும் என்பது நம்பிக்கை.

மனரீதியான பிரச்சனைகளிலிருந்து விடுபட எருக்கம்பூவையும், எருக்கம் செடியின் இலையையும் அர்பணிப்பார்கள். இதன் மூலம் தீரா நோய்களிலிருந்து விடுபடலாம். ஆன்மீக பாதைகளில் இருக்கும் இடர்களை நீக்க மாதுளை இலைகளை அர்பணிப்பது வழக்கம்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News