இந்திய ஒற்றுமையை உலகத்திற்கு பறைசாற்றும் தீபாவளி பண்டிகை!
இந்திய ஒற்றுமையை உலகத்திற்கு பறைசாற்றும் தீபாவளி பண்டிகை!

ஒளிகளின் பண்டிகை தீபாவளி . தீமைகளை எதிர்த்து தர்மமும், நேர்மையும் வெற்றி கண்டதை உணர்த்தும் திருவிழா.. இன்று ஏற்றபடும் தீபமானது, வெளிப்புற சூழ்நிலைக்கு ஒளியூட்டுவதற்காக மட்டுமல்ல., நம் உட்புறத்தில் இருக்கும் அறியாமை இருளை அகற்றி, ஞானமெனும் ஒளியேற்றுவதற்காக.
நம் நாடெங்களிலும் தீபாவளி திருநாள் கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு பகுதியிலும் வணங்கப்படும் தெய்வங்கள் மாறுபடலாம். சடங்குகள், சம்பிர்தாயங்கள் மாறுபடலாம் ஆனால் இந்த பண்டிகையின் சாரம்சம் அனைத்து பகுதியிலும் ஒன்றாகவே இருக்கிறது.
ஆன்மீக ரீதியாக பார்த்தால் முக்தியெனும் உண்மை அறியாமல், லெளகீக வாழ்வில் மூழ்கியிருக்கும் அறியாமையை அகற்றும் தினம் தீபாவளி. இந்த நாளில் தேவி மஹாலக்ஷ்மியை வணங்குவது மிகவும் சிறப்பானதாக கருதப்படுகிறது. வட இந்தியாவில் தீபாவளி பண்டிகை ஐந்து நாட்கள் கொண்டாப்படுகின்றன.
முதல் நாளை தன்வந்திரி திரியோதசி என்றும் அல்லது தந்தராஸ் என்றும் அழைக்கின்றனர். இரண்டாம் நாள் நரகா சதுர்திஷி என்றும் மூன்றாம் நாள் தீபாவளி என்றும் நான்காம் நாள் கோவர்தன பூஜை என்றும் ஐந்தாம் நாள் பாய் தூஜ் என்றும் அழைக்கப்படுகிறது.
இந்தியா மட்டுமல்லாமல் மலேசியா, சிங்கப்பூர் போன்ற இந்தியர்கள் வாழும் பல நாடுகளில் அரசாங்க விடுமுறையுடன் தீபாவளி கொண்டாடப்படுகிறது. மேற்கு வங்காளத்தில் தீபாவளி காளி பூஜையுடன் கொண்டாடப்படுகிறது.
காஷ்மீர் துவங்கி குமரி வரையில் இந்த பண்டிகை தனித்துவம் வாய்ந்ததாகவே கொண்டாடப்படுகிறது. ஒடிசாவில் சில குறிப்பிட்ட இனத்தவர்கள், இறந்தவர்களை எண்ணி வணங்குகிறார்கள். 1577 ஆம் ஆண்டு முதல் தீபாவளி சீக்கியர்களுக்கும் முக்கியமானதாகவே இருக்கிறது. காரணம் ஒரு தீபாவளி நன்னாளில் தான் தங்க கோவிலுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.
சில இடங்களில் தீபாவளி என்பது புதிய கணக்கை துவங்கும் தினமாக கொண்டாடப்படுகிறது. கணபதிக்கும், லக்ஷ்மி தேவிக்கும் பூஜைகள் நிகழ்த்தி புதிய பொருளாதார ஆண்டாக கருதி கொண்டாடுகின்றனர்.
மஹாவீரர் முக்தியடைந்த தினம் என்பதால் ஜெயின் மதத்தினருக்கும் இந்த பண்டிகை முக்கியமானது. தித்தப்பான வாழ்வை குறிக்க இனிப்புகளுடன், துன்பம், துயர், அறியாமை போன்ற இருளை ஆழிக்க ஒளியெனும் பிரகாசம் ஏற்றி இந்த தீபாவளியை தித்திப்பாய் கொண்டாடுவோம்.
கொரொனோ போன்ற சாவல்களை இன்னும் உறுதியான ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்துடன் எதிர்கொள்வோம். கதிர் நியூஸ் வாசகர்களுக்கு தீபாவளி நல்வாழ்த்துகள்!!