Kathir News
Begin typing your search above and press return to search.

பழனியில் பறவைக்காவடியில் சென்று நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்.!

பழனியில் பறவைக்காவடியில் சென்று நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்.!

பழனியில் பறவைக்காவடியில் சென்று நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  25 Feb 2021 11:17 AM GMT

திண்டுக்கல் மாவட்டம், பழனி முருகன் கோயிலுக்கு தினமும் பல ஆயிரம் கணக்கான பக்தர்கள் வருகை புரிவது வழக்கம்.

இந்நிலையில், தற்போது மாசிமகத்தை முன்னிட்டு பக்தர்கள் அதிகளவில் பழனி முருகன் கோயிலுக்கு வந்து செல்கின்றனர். கோவை மாவட்டம் வால்பாறையில் இருந்து பழனிக்கு பாதயாத்திரையாக வந்த பக்தர்கள், பழனி சண்முக நதியில் புனித நீராடி பின்பு உடல் முழுவதும் அலகு குத்தி அந்தரத்தில் தொங்கியபடி பிரம்மாண்டமான பறவை காவடி எடுத்து வந்தனர்.

பிரம்மாண்ட பறவை காவடியில் தொங்கியபடி 9 பக்தர்கள் தங்களது உடல்கள் முழுவதும் அலகு குத்தி, அலங்கரிக்கப்பட்ட ராட்சத கிரேனில் தொங்கியபடியே மேளம் அடித்துக்கொண்டு வந்து பழனி மலையில் கிரிவலம் வந்து பாத விநாயகர் கோயிலில் நேர்த்திக்கடன் செலுத்தி நிறைவு செய்தனர்.
இதில் ஏராளமான ஆண், பெண் பக்தர்கள் கலந்து கொண்டு முருகனை தரிசனம் செய்து விட்டு சென்றனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News