Kathir News
Begin typing your search above and press return to search.

ஆன்மா என்பது என்ன? மனித உடல் என்பது என்ன? ஆதிசங்கரரின் பார்வையில்.!

ஆன்மா என்பது என்ன? மனித உடல் என்பது என்ன? ஆதிசங்கரரின் பார்வையில்.!

ஆன்மா என்பது என்ன? மனித உடல் என்பது என்ன? ஆதிசங்கரரின் பார்வையில்.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  19 Oct 2020 7:05 AM GMT

எத்தனையோ குரு மார்கள் இந்த பூமியில் தோன்றியிருக்கிறார்கள். எத்தனையோ குருமார்கள் இந்த பூமியில் தற்போது நம்முடன் எழுந்தருளியும் இருக்கிறார்கள். இது போன்ற ஒரு பழம்பெருமை வாய்ந்த பாரம்பரியத்தில் இருப்பது நமது பெருமை. மகா குரு ஒருவரின் பெருமையை ஒரு சில வார்த்தைக்குள் கொண்டுவருதல் என்பது நிச்சயம் சாத்தியமல்ல. ஒவ்வொரு ஆன்மீக சாதகருக்குள்ளும் பெரும் பிரவாகமாக ஆதி சங்கரர் பெருகியிருக்கிறார். அத்வைத்த வேதாந்தத்தின் ஆன்மா இவர்.

மிக இளைய வயதில் அதாவது தன் எட்டாம் அகவையிலேயே துறவறம் மேற்கொண்டவர் சங்கரர். தன்னுடைய கால்களால் இந்தியாவின் பரந்து விரிந்த பல இடங்களுக்கு சென்றார். தன்னுடைய அத்வைத்த வேதாந்தத்தை தேசமெங்கும் விவாதங்களாக, உரையாக, வெளிப்படுத்தினார்.

நிர்வாண சடகம் என்று இன்று பலராலும் போற்றி துதிக்கப்படும் வரிகள் ஆதி சங்கரர் அவர்களால் மிக அருளப்பட்டது. நிர்வான சடகம் என்பது அனைத்து சாஸ்திரங்களின் அடி நாதமாகும். இது வேதாந்தத்தின் முக்கிய மையம். ஒருவரால் இதனை முழுமையாக உள்வாங்கி கொள்ள முடியுமேயாயின், இந்த மொத்த பிரபஞ்ச இயக்கத்தின் இரகசியத்தை அறிந்து கொண்டிருக்கிறோம் என கூட சொல்லாம். வேதம், வேள்வி, மதம், ஆகியவற்றை மறுத்து இறுதியில் பிரம்மமே நிலைத்து ஆனந்தம் நல்கும் என ஆதிசங்கரர் இச்சுலோகங்களின் மூலம் எடுத்து இயம்புகிறார்.

இவர் நாட்டின் நான்கு திசைகளிலும் நான்கு மடங்களை நிறுவினார். கிழக்கில் கோவர்தன மடம், தெற்கில் சிருங்கேரி சாரதா மடம், மேற்கில் துவாரகை காளிகா மடம், வ்டக்கில் ஜோஷி மடம் ஆகியவற்றை நிறுவி இதற்கு மகா வாக்கியங்களாக நான்கை முன்னிருத்தி தன்னுடைய தலைமை சீடர்களை இம்மடத்திற்கு பீடாதிபதிகளாகவும் நியமித்தார்.

ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இருக்கிறது ஆன்மா. அவர்கல் கொண்டிருக்கும் மனித உடலானது வெறும் புற வடிவம் மட்டுமே. அதனுள் இருக்கும் ஆன்மாவே பிரம்மம். ஆன்மா என்பது பிரம்மத்தின் ஒரு துளி. நமக்குள் உள்ளும், வெளியும் நம்மை சுற்றியும் அனைத்திலும் இருப்பது பிரம்மமே. தெய்வீக ஆத்மாவான பிரம்மமத்திலிருந்தே அனைத்து உயிர்களும் தோன்றியிருக்கிறது. நாம் நம்மை சுற்றி நடப்பதாக நினைப்பது அனைத்துமே வெறும் நிகழ்வுகள் மட்டுமே. நிகழ்வுகளை மட்டுமே வாழ்க்கை என அறியாமையில் இருக்கிறோம்.

எப்போது இந்த அறியாமையை கடந்து, நிகழ்வுகளின் தாக்கத்திலிருந்து வெளியேறி நமக்குள் இருக்கும் ஆத்மாவை, பிரம்மத்தை உணர்கிறோமோ அதுவே உண்மை நிலையாகும். எனும் உன்னத தத்துவம் ஆதி சங்கரர் அருளியது. கி.பி 7 ஆம் நூற்றாண்டில் இவர் வாழ்ந்தார் என்பதும், சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன் கி.பி நான்காம் நூற்றாண்டில் இவர் வாழ்ந்தார் என்பது நிலவி வரும் இரு வேறு கருத்துகளாகும்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News