Kathir News
Begin typing your search above and press return to search.

அனுமாரின் இந்த திருவுருவ படங்களை வீட்டில் வைக்க கூடாது! ஆச்சரிய தகவல்!

அனுமாரின் இந்த திருவுருவ படங்களை வீட்டில் வைக்க கூடாது! ஆச்சரிய தகவல்!

அனுமாரின் இந்த திருவுருவ படங்களை வீட்டில் வைக்க கூடாது! ஆச்சரிய தகவல்!
X

Thoorigai KanagaBy : Thoorigai Kanaga

  |  7 Feb 2021 1:06 PM IST

உருவ வழிபாட்டிற்கு முக்கியத்துவம் தருவது இந்து சமயம். விக்ரங்களை கடவுளின் பிரதி பிம்பமாக பார்க்கும் வழக்கம் நம்முடையது. ஆனாலும் கூட வீடுகளில் வைக்க கூடாத விக்ரங்கள் என சிலவற்றை வேதங்கள் வகுத்துள்ளன.

அந்த வகையில் பகவான் அனுமன் அவர்கள், பக்தர்களை காக்கும் கடவுள் ஆவார். அவருடைய பெயரை சொன்னாலே அச்சம் அகலும் அவர்தம் பக்தர்க்களின் நம்பிக்கை, வாகனங்கள் துவங்கி, வீட்டின் முகப்பு, விருப்ப பொருட்கள் சிலவற்றின் மீது கூட ஶ்ரீ அனுமரின் படத்தை ஒட்டியிருப்பதை இன்றும் நாம் காண முடியும்.

பல கோவில்கள், அனுமரின் தனித்த விக்ரகத்தை, மற்றும் சீத்தா ராமருடன் இருப்பது போன்ற புகைப்படங்கள், விக்ரங்களை உருவாக்குகின்றன. ஆனாலும் கூட ஶ்ரீ அனுமரின் சில குறிப்பிட்ட படங்களை வீடுகளில் வைக்க கூடாது எனவும் சாஸ்திரங்கள் சொல்கின்றன.

அவை கீழே தொகுக்கப்பட்டுள்ள ;

  1. ஶ்ரீ அனுமர், தன்னுடைய மார்பை கிழித்து ஶ்ரீ ராமரை காட்டுவது போன்ற புகைப்படத்தை வைக்க வேண்டாம் என சொல்லப்படுகிறது.
  2. பின் அவர் சஞ்சீவி மலையை எடுத்து கொண்டு பறப்பதை போன்ரா விக்ரகமும், படமும் வைக்க வேண்டாம் என அறிவுருத்தப்படுகிறது. காரணம் அவர் ஒரு இடத்தில் இல்லாமல் பறப்பது போன்று இருப்பதால், அவர் வீட்டில் தங்காமல் சென்றுவிடுவாரோ என்ற பொருலில் இந்த படம் அனுமதிக்கப்படுவதில்லை.
  3. அனுமரின் தோளில் ராமரும், சீதையும் அமர்ந்திருக்கும் படத்தை வைக்க வேண்டாம் என அறிவுருத்தப்படுகிறது.
  4. அவர் லங்கையை அழிப்தை போன்ற படத்தை வைக்க வேண்டாம். காரணம் வாஸ்து படி ஒரு வீட்டை, ஊரை எரிப்பதை போன்ற படம் வீட்டினுள் இருக்க வேண்டாம் என்பதால்
  5. திருமணமான தம்பதியரின் அறையில் அனுமர் படத்தை வைக்க கூடாது என்கிறது சாஸ்திரம்.
  6. மாறாக, அனுமர் ஆசிர்வதிப்பதை போன்ற படத்தினை வீட்டினுள் வைக்கலாம், இது வீட்டின் அமைதியை, ஆனந்தத்தை உறுதிப்படுத்தும்.
  7. அனுமர் சிவப்பு உடை அணிந்ததை போன்ற படத்தை வீட்டினுள் வைப்பதால் குழந்தைகள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள் என சொல்லப்படுகிறது.

  1. அதுமட்டுமின்றி ஶ்ரீ ராமரின் தர்பார் புகைப்படத்தை வீட்டின் நடுவே வைப்பது வீட்டின் ஒற்றுமைக்கு மிகுந்த நன்மை பயப்பதாகும்.
  2. மேலும் ஶ்ரீ ராமருக்கு சேவை செய்வதை போன்ற அனுமர் புகைப்படம், வீட்டின் செல்வ வளத்தை பெருக்கும்

Next Story
கதிர் தொகுப்பு
Trending News