Kathir News
Begin typing your search above and press return to search.

செல்வம் விரயமாகாமல் தங்கம் சேர இதை செய்யுங்க!

செல்வம் விரயமாகாமல் தங்கம் சேர இதை செய்யுங்க!
X

G PradeepBy : G Pradeep

  |  11 March 2021 6:00 AM IST

ஒருவருக்கு செல்வம் சேர்வதற்கான வாய்ப்புகள் இல்லாமல் போவதற்கும், தங்கம் சேராமல் போவதற்கான வாய்ப்புகள் அவரது ஜாதகத்தில் தெளிவாக தெரியும் குறிப்பாக சிலருக்கு தங்கம் சேர்ந்து கொண்டே இருக்கும் சிலருக்கு தங்கமே வீட்டில் தங்காது .

மஞ்சள் உலோகமான தங்கம் வீட்டில் தங்குவதற்கு நவகிரகங்களில் குரு வலுவாக நல்ல இடத்தில் அமைந்திருப்பது முக்கியம். குருவிற்கு பிடித்த உலோகம் தங்கம் , குருவின் நட்சத்திரமான புனர்பூசம் விசாகம் பூரட்டாதி போன்ற நட்சத்திரத்தில் பிறந்து குரு பலம் பெற்றவர்களுக்கு ஏராளமான தங்கம் சேரும். இந்த உலோகத்திற்கு உரிய தெய்வம் முருகப்பெருமான் . முருகன் தலத்தல் சென்று வழிபட்டால் தாகம் விரயமாவது தடுக்கப்படும் .



மேலும் வியாழக்கிழமை தோரும் குருபகவானை அவருக்குரித்ய ஸ்லோகங்களை சொல்லி அர்ச்சிக்க வேண்டும் . தங்கம் விரயமாகாமல் நம்மிடம் நிரந்தரமாக இருப்பதற்கு சில பரிகாரமுறைகள் உள்ளன . தங்கத்திற்கு உரியவர்கள் குருவும் முருகனும் ஆகவே இவர்கள் இருவரின் சக்திகளை ஆகர்ஷணம் செய்து கொள்வது அவசியம் . ஒரு பித்தளை சொம்பில் அரிசி கொண்டைக்கடலை துவரம் பருப்பு ஆகியவற்றை சம அளவில் எடுத்து உள்ளே போட்டு ஒரு தேங்காயை எடுத்து அதன் மேல் வைத்து

ஒரு நாள் வழிபட வேண்டும் பிறகு அருகில் உள்ள முருகன் கோயிலுக்கு குடும்பத்தின் சென்று முருகன் காலடியில் வைத்து வேண்டிக் கொண்டு கோயில் அர்ச்சகருக்கு தானமாக கொடுத்து விட வேண்டும் . அந்த நாள் மாலை கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு கொண்டை கடலை நெய்வேத்யத்தை வழங்க வேண்டும். இந்த பரிகாரத்தை செய்வதால் தங்கத்தை ஈர்க்கும் ஆகர்ஷணம் வரும்.




மேலும் குறிப்பிட்ட சில நறு மணங்கள் தங்கத்தை ஈர்க்கும் சக்தி பெற்றது . பெருமாளுக்கு உகந்த துளசி பச்சை கற்பூரம் ஏலக்காய் ஆகியவற்றை ஒரு செம்பு பாக்கிரத்தில் போட்டு வைத்தால் தங்க ஆகர்ஷணம் ஏற்படும் . முடிந்தால் இதில் சிறிய தங்கத்தை போட்டு வைக்கலாம். அமாவாசை தொடங்கி மூன்று நாட்கள் கழித்து இதை செய்து அடுத்த பெளர்ணமி வரும் வரை வைத்திருக்க வேண்டும் . இதை பணம் நகை வைக்கும் இடத்தில் வைக்கலாம் இந்த இடம் சுத்தமாக இருக்க வேண்டும் . இதன் நறுமணம் அந்த இடம் முழுதும் பரவுமாறு இருக்க வேண்டும் . இதை ஆடிக்கடி செய்து வருவது நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும் .

Next Story
கதிர் தொகுப்பு
Trending News