அம்மனின் சக்தி பீடங்கள் எவ்வாறு தோன்றியது தெரியுமா? விளக்கும் குட்டி கதை
சிலர் அம்மனின் சக்தி பீடங்கள் 51 இருப்பதாகவும் இன்னும் சிலர் 108 சக்தி பீடங்கள் இருப்பதாகவும் சொல்வார்கள். அவை எவ்வாறு உருவாகியது என்பது பற்றி காண்போம்.
By : Karthiga
ஒருமுறை பார்வதி தேவி தட்சனின் மகளாக தாட்சாயினி என்ற பெயரில் பிறந்து சிவபெருமானை மணந்தாள். சிவபெருமானின் மீது கோபத்தில் இருந்தததால் தான் நடத்திய மிகப்பெரிய யாகத்திற்கு சிவபெருமானை அழைக்கவில்லை. அவருக்காக அவிர்பாகத்தையும் கொடுக்க தயாராக இல்லை. இதனால் கோபம் கொண்ட தாட்சாயினி தட்சன் நடத்திய யாகத்திற்கு சென்று அங்கிருந்த யாக குண்டத்தில் விழுந்து உயிரை மாய்த்தாள்.
சிவபெருமான், மனைவி தாட்சாயனியின் உடலை எடுத்து தலையில் வைத்துக்கொண்டு ருத்ர தாண்டவம் ஆடினார் .இதனால் பிரபஞ்சமே நடுங்கியது .உலகின் உயிர்களுக்கு ஆபத்து நிகழக் கூடாது என்பதற்காக மகாவிஷ்ணு தன்னுடைய சக்ராயுதத்தை வீசி தாட்சாயணியின் உடலை பல பாகங்களாக வெட்டி வீசினார் .
அந்த உடல் பாகங்கள் மற்றும் ஆபரணங்கள் விழுந்த இடங்களில் உருவான அம்மன் தலங்கள் 'சக்தி பீடங்கள் ' என்று அழைக்கப்படுகின்றன. இப்படி 51 சக்தி பீடங்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது .இன்னும் சிலர் 108 சக்தி பீடங்கள் என்றும் சொல்வார்கள். இப்படியாகத்தான் அம்பாள் பல்வேறு இடங்களில் மக்களுக்கு அருள்பாலித்து வருகிறாள்.