Kathir News
Begin typing your search above and press return to search.

விநாயகர் முதன் முதலில் அவதரித்த இடம் எது தெரியுமா?

விநாயகர் முதன் முதலாக அவதரித்த இடம் பற்றிய தகவல்

விநாயகர் முதன் முதலில் அவதரித்த இடம் எது தெரியுமா?

KarthigaBy : Karthiga

  |  2 Aug 2023 2:24 AM GMT

உத்தரகாண்ட் மாநிலத்தில் ருத்ரபிரயாகை மாவட்டத்தில் உள்ளது சிவபெருமானின் முக்கியமான தலங்களில் ஒன்றான கேதார்நாத் கோவில். இந்த ஆலயத்தின் அடிவாரத்தில் அமைந்திருக்கிறது. கௌரி குண்டம் என்ற இடம் இந்து புனித யாத்திரை தளங்களில் இதுவும் ஒன்று. இந்த இடம் கார்வால் கோட்டத்தில் அமைந்த இமயமலையில் 6520 அடி உயரத்தில் அமைந்துள்ளது . கௌரி குண்டத்தில் வெந்நீர் ஊற்றுகள் காணப்படுகின்றன.


சிவபெருமானை திருமணம் செய்வதற்காக பார்வதி நீராடி தவம் இருந்த இடமே கெளரிகுண்டம். திருமணத்திற்கு பின்னர் விநாயகரை பார்வதி தேவி தன்னுடைய மகனாக பெற்றதும் இந்த இடம் தான் . அந்த வகையில் இந்த கௌரி குண்டம் விநாயகர் அவதரித்த இடமாக அறியப்படுகிறது. இங்குள்ள ஆலயத்தில் பார்வதி தேவி தன்னுடைய கரங்களில் விநாயகரை தூக்கி வைத்திருக்கும் சிற்பம் ஒன்று மலைப் பாறைகளிலேயே வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News