வாழ்வில் வெற்றி பெற ராவணன் லட்சுமணனுக்கு உரைத்த மூன்று உபதேசங்கள் எவை தெரியுமா?
மரணப் படத்தில் இருக்கும் போது இலங்கை அரசன் ராவணன் லட்சுமணனுக்கு வாழ்வில் வெற்றி பெற மூன்று உபதேசங்களை கூறினார்
By : Karthiga
எந்தவொரு சுபகாரியத்தையும் செய்ய காலம் தாழ்த்தக்கூடாது, அதேபோல தப்பான செயல்களை எவ்வளவு தாமதமாக செய்யமுடியுமோ அவ்வளவு தாமதமாக செய்ய வேண்டும். இராமரை பற்றி முழுதாக தெரிந்து கொள்ளாமல் அவசரப்பட்டு குடிலுக்கு வந்து சீதையை கவர்ந்து வந்தததால்தான் தனக்கு இந்த நிலை ஏற்பட்டதாக கூறினார்.
உன் எதிரியை எப்பொழுதும் குறைவாக மதிப்பிடாதே. இராவணன் பிரம்மரிடம் மரணம் இல்லா வரம் வாங்கியபோது மனிதர்கள் மற்றும் குரங்குகள் தவிர மற்ற எவற்றாலும் தனக்கு மரணம் நேரக்கூடாது என்று வரம் வாங்கினார். ஏனெனில் தன்னை வதைக்கும் தகுதியோ, சக்தியோ மனிதர்களுக்கு இல்லை என்று அவர்களை குறைவாக மதிப்பிட்டதே தன் அழிவுக்கு காரணம் என கூறினார்.
உன் எந்தவொரு ரகசியத்தையும் எப்போதும் யாரிடமும் கூறாதே. தன் மரண ரகசியத்தை தன் சகோதரன் விபீஷணனிடம் பகிர்ந்து கொண்டதே தன் வீழ்ச்சிக்கு காரணம் எனவே ஒருபோதும் உங்கள் ரகசியங்களை மற்றவர்களிடம் கூறாதீர்கள் என்று கூறி இலட்சுமணை ஆசிர்வதித்து விட்டு உயிர்விட்டார் இராவணன்.