Kathir News
Begin typing your search above and press return to search.

குலதெய்வம் கோவிலுக்கு செல்கிறீர்களா? கட்டாயமாக இந்த ஒரு பொருளை மறக்காதீர்கள்- கைமேல் பலன் கிடைக்கும்

குலதெய்வ வழிபாடு என்பது மிகவும் சக்தி வாய்ந்த ஒரு வழிபாடு. நம் குலம் தழைக்கவும் நம் வம்சம் காக்கப்படவும் குலதெய்வ வழிபாடு மேற்கொள்வது மிக அவசியம்.

குலதெய்வம் கோவிலுக்கு செல்கிறீர்களா? கட்டாயமாக இந்த ஒரு பொருளை மறக்காதீர்கள்- கைமேல் பலன் கிடைக்கும்
X

KarthigaBy : Karthiga

  |  2 Jun 2023 4:45 PM IST

குலதெய்வ வழிபாடு மேற்கொள்வது மிகவும் நன்மை பயக்கக் கூடியதாகவும் கட்டாயமானதாகவும் கருதப்படுகிறது. பிற தெய்வங்களின் அருளாசி கிடைக்க வேண்டுமெனில் நிச்சயமாக முதலில் நீங்கள் உங்கள் குலதெய்வத்தை வழிபட வேண்டும். பயணம் மேற்கொள்ளும் போதும் மிக முக்கியமான நிகழ்வுகளின் போதும் கட்டாயமாக உங்கள் குலதெய்வத்தை முதலில் வழிபட்டு தொடங்குவதானால் அந்த காரியம் நிச்சயம் வெற்றி பெறும்.


நம் முன்னோர்கள் பரம்பரை பரம்பரையாக வழிபட்டு வரும் தெய்வம் தான் நம் குலதெய்வம். குலதெய்வத்திற்கு வருடம் ஒருமுறையாவது பொங்கல், பூஜை இவையெல்லாம் செய்வது சிறப்புக்குரியதாக கருதப்படுகிறது. பௌர்ணமி தினத்தன்று குலதெய்வத்தை வழிபடுவது அதீத பலன்களை தரும் என்று நம்பப்படுகிறது. அவ்வாறு நீங்கள் குலதெய்வம் கோவிலுக்கு செல்லும் பொழுது வழக்கமாக எடுத்துச் செல்லும் பூஜை பொருள்களுடன் ஒரு கட்டி அச்சு வெல்லமாவது எடுத்து செல்ல வேண்டும்.


அச்சு வெல்லத்தை உங்கள் குலதெய்வத்தின் முன்னால் வைத்து பிரார்த்தித்து அதனை மீண்டும் வீட்டுக்கு எடுத்து வந்து பயன்படுத்தும் போது நிச்சயமாக உங்கள் வேண்டுதலை இறைவன் உடனடியாக நிறைவேற்றி வைப்பார் . கை மேல் பலன் கிடைக்கும என்பது நம்பிக்கை. அச்சு வெல்லம் வைத்து வழிபடுவது குலதெய்வ வழிபாட்டில் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. நீங்கள் எவ்வளவு வேண்டுமானாலும் வெல்லம் எடுத்துச் சென்று இறைவனிடம் வைத்து பிரார்த்தித்து வரலாம்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News