Kathir News
Begin typing your search above and press return to search.

விநாயகரை முழுமுதற் கடவுளாக ஏன் வணங்குகிறோம் என்று தெரியுமா?

கணங்களுக்கு எல்லாம் அதிபதியாக திகழும் கணேச பெருமானை முழுமுதல் கடவுளாக வணங்குவதற்கான காரணம் பற்றி காண்போம்.

விநாயகரை முழுமுதற் கடவுளாக ஏன் வணங்குகிறோம் என்று தெரியுமா?

KarthigaBy : Karthiga

  |  29 May 2023 6:30 PM GMT

சிலருக்கு எந்த ஒரு செயலை எடுத்தாலும் அதில் தடை ஏற்பட்டுக்கொண்டே இருக்கும். அந்த தடைக்கற்களை படிக்கற்களாக மாற்ற விநாயகப் பெருமானை வழிபட வேண்டும்."கணங்களுக்கெல்லாம் அதிபதியாகத் திகழும் கணேச பெருமானை முதலில் வணங்கி எந்த காரியத்தை தொடங்கினாலும் எடுத்த காரியம் எல்லாம் வெற்றியாகும்" என்ற அசைக்க முடியாத நம்பிக்கை இருப்பதனால் அவரை முழுமுதற் கடவுளாக வணங்கி மகிழ்கிறோம்.


நாயகன் என்றால் தலைவன் என்று பொருள். ‘வி’ என்பதற்கு ‘இல்லை’ என்று அர்த்தம். விநாயகர் என்பது, இவருக்கு மேல் பெரிய தலைவர் எவருமில்லை என்பது முழுப் பொருளாகும். கோவில்களில் விநாயகப் பெருமானுக்கு அர்ச்சனை செய்யப்படும்போது ‘ஓம் அநீஸ்வராய நம’ என்றும் கூறுவார்கள். அநீஸ்வராய என்பதற்கு தனக்கு மேல் ஒரு ஈஸ்வரன் இல்லை என்பது பொருளாகும்.


விநாயகர் முதல் கடவுளாக போற்றப்படுவதற்கு உதாரணமாக பல காரணங்கள் கூறப்படுகிறது. ஞானப்பழத்தை அடைய தாய், தந்தையை சுற்றி வந்து ஆன்மீக தத்துவத்தை முதன் முதலில் எடுத்துரைத்தவர் கணபதி. பொருள் மற்றும் ஆன்மீக தத்துவங்களின் இணைப்பாக விளங்கும் நம் உடலின் மூலாதார சக்கரத்தை கணபதி ஆளுவதாக மக்கள் நம்புகிறார்கள்.


முழுமுதற் கடவுள் விநாயகரை தினம்தோறும் வணங்குவது மிகவும் சிறப்பான ஒன்று. அதிலும் புதன் கிழமைகளில் வணங்கினால் மிக மிக சிறந்தது. எல்லோரும் வணங்கக்கூடிய, எல்லோருக்கும் பிடித்தமான கடவுள் என்றால் அந்த வரிசையில் விநாயகருக்கு முதலிடம் தான்.விநாயகருக்கு புதன்கிழமை அன்று சிகப்பு நிற குங்குமத்தை படைக்க வேண்டும்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News