தீபத்தையும் நெருப்பையும் வாயால் ஊதி அணைக்கக் கூடாது ஏன் தெரியுமா?
நெருப்பை அக்னிதேவனாக கருதியதனால் அதனை எச்சில் நிறைந்த சுத்தமான வாயால் அணைக்கக் கூடாது என்ற நம்பிக்கையை நம் முன்னோர்கள் கொண்டிருந்தனர் .
By : Karthiga
மனிதன் தீயை கண்டுபிடித்து இருக்காவிட்டால் மனித சரித்திரம் வேறொன்றாயிருக்கும் என்பதை யாரும் நினைத்துப் பார்ப்பதில்லை.
தெய்வ சந்நிதி நிறைந்த பூமியின் இந்த பூமியின் அற்புதப் படைப்பாக புராணம் தீயை சிறப்பிக்கின்றது. அந்த சிருஷ்டியும் சங்காரமுமாக விளங்குகின்றது.
நெருப்பில் உணவை வேக வைத்து அதன் ருசி அறிந்த மனிதனுக்கு இப்போது உணவு என்றாலே வேகவைத்த உணவு தான்.உணவு சமைக்க மனிதன் நெருப்பை வீட்டிற்குள் பாதுகாத்து வைக்க அடுப்புகள் அமைத்தனர். தேவைக்கேற்றபடி தீயை கூட்டியும் குறைத்தும் வைத்து பயன்படுத்தி வந்தனர்.தீ அணையாமல் பாதுகாக்க வேண்டிய அவசியம் ஆதி மனிதனுக்கு இருந்தது. அன்றும் நெருப்பை அணைக்க மேலும் வேறு வழிகள் கடைபிடிக்கப்பட்டது.
நெருப்பை அக்னிதேவனாக கருதியதால் அதை எச்சில் நிறைந்த அசுத்தமான வாயால் ஊதி பெருக்க கூடாது என்று நம்பிக்கை கொண்டிருந்தனர். குனிந்து கவனமில்லாமல் தீயை அணைக்க முயற்சி செய்யும்போது தலைமுடி, ஆடைகள் முதலியவற்றில் தீப்பிடிக்க வாய்ப்புகள் ஏராளம் .
அறிவுரையாக இதை திரும்பத் திரும்ப கூறிய முன்னோர்கள் இளைய தலைமுறையினரை விபத்தில் இருந்து காப்பாற்றி வருகின்றனர்.