Kathir News
Begin typing your search above and press return to search.

உங்கள் கனவில் பசு, சூரியன் நிலா ஆகியவற்றை காண்கிறீர்களா? எனில் இந்த பலன்களை அடைவீர்கள்..!

உங்கள் கனவில் பசு, சூரியன் நிலா ஆகியவற்றை காண்கிறீர்களா? எனில் இந்த பலன்களை அடைவீர்கள்..!

உங்கள் கனவில் பசு, சூரியன் நிலா ஆகியவற்றை காண்கிறீர்களா? எனில் இந்த பலன்களை அடைவீர்கள்..!
X

Thoorigai KanagaBy : Thoorigai Kanaga

  |  19 Feb 2021 2:59 PM IST

நம் அனைவரின் கனவிலும் பல நல்ல விஷயங்கள் சில சமயங்களில் சில துர் கனவுகளை நாம் காண நேரிடலாம். பெரும்பாலும் அவை மேலோட்டமாக எந்த பொருளும் நமக்கு தருவதில்லை என்ற போதும், சில வேளைகளை நம் மனதிற்கு எதிர்காலத்தை உணர்த்தும் தன்மை இருப்பதாக சொல்லப்படுகிறது. குறிப்பாக பவிஷ்ய புராணத்தின் படி சில கனவுகளை நீங்கள் கண்டால், பணம் உங்கள் வழியில் வருகிறது என்பதை நீங்கள் உறுதிப்படுத்தி கொள்ளலாம்.

கனவில் சூரியனை கண்டால் விரைவில் பணவரவை பெறுவீர்கள் என்று அர்த்தம். எத்தனை வெளிச்சத்துடன் காண்கிறீர்களோ அந்த வெளிச்சத்தின் தீவிரத்தை பொருத்து நீங்கள் பண வரவை பெறுவீர்கள். சூரியனை போலவே சந்திரனை காண்பதும் நமக்கு நல்ல பலன்களை கொடுக்கும். காரணம் அவை கிரகமாகவும் இருப்பதால் அது நம் ஜோதிட கட்டத்திற்கு சாதகமான பலன்களை ஏற்படுத்தும்.

நிஜ வாழ்வில் முடி கொட்டினால் அது ஆரோக்கியமான விஷயம் என்றபோதும், கனவில் முடி கொட்டினால் எதிர்மறையான விஷயங்கள் நம்மை விட்டு அகன்று நமக்கு லஷ்மியின் அருள் விரைவில் கிடைக்கயிருக்கிறது என்று அர்த்தம்.

பசு பால் கொடுப்பதென்பது மிகவும் நேர்மறையான விஷயம். ஆனால் எத்தனை பேருக்கு தெரியும். பசு பால் கறப்பதை போன்ற கனவை கண்டால் அது அதிர்ஷ்டத்தின் அறிகுறி. உடைந்த கண்ணாடி கனவிலும் சரி, நிஜத்திலும் சரி நமக்கு ஏதோ எதிர்பாராதது நிகழ போகிறது என்பதை உணர்த்தினாலும், கனவில் காணும் நல்ல விதமான முகம் பார்க்கும் கண்ணாடி நமக்கு நல்ல அதிர்ஷ்டத்தை கொடுக்கும். இனிப்பு வகைகள், மற்றும் நகை அணிந்த பெண் போன்றவைகளை கனவில் கண்டால் நல்ல காலம் நம்மை நெருங்குவதன் அறிகுறி என்கிறது பவிஷ்ய புராணம். மேலும் எந்தெந்த ராசிகாரர்கள் எந்தெந்த நிற பர்ஸ் எனப்படும் பணப்பையை வைத்திருந்தால் நல்லது எனவும் சொல்லப்படுகிறது.

உதாரணமாக ரிஷப ராசிகாரர்கள் வெள்ளை நிற பர்ஸும். மிதுனம் எனில் பச்சை நிறமும், கடக ராசிகாரர்கள் வெளிர் நிற பர்ஸும் சிம்ம ராசிகாரர்கள் சிவப்பு, மஞ்சள் அல்லது ஆரஞ்சு ஆகியவை வைத்துக்கொள்ளலாம்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News