Kathir News
Begin typing your search above and press return to search.

'கொக்கென்று நினைத்தாயோ கொங்கணவா?' - இக்கேள்வி விளக்கும் கதை

கொங்கணர் பற்றி கர்ண பரம்பரை கதை ஒன்று கூறப்படுகிறது.அதைக் காண்போம்.

கொக்கென்று நினைத்தாயோ கொங்கணவா? - இக்கேள்வி விளக்கும் கதை
X

KarthigaBy : Karthiga

  |  14 Feb 2023 12:00 PM GMT

கொங்கனர் ஒரு சமயம் மரத்தின் கீழ் அமர்ந்து தவம் செய்து கொண்டிருந்தார். அப்போது மரத்தின் மேல் இருந்த கொக்கு ஒன்று அவர் மீது எச்சம் போட்டது. உடனே கொங்கனர் கண்ணை விழித்து அந்த கொக்கை பார்த்தார்.


அது எரிந்து சாம்பல் ஆயிற்று. இப்படி அடிக்கடி உக்கிரம் அடையும் கொங்கணர் திருவள்ளுவரின் வீட்டுக்கு ஒருமுறை யாசகம் கேட்டுச் சென்றார் . அவர் வீட்டின் வாசலில் நின்று யாசகம் கேட்டார். அதே நேரத்தில் வீட்டுக்குள் திருவள்ளுவருக்கு அவருடைய மனைவி வாசுகி உணவு பரிமாறி கொண்டு இருந்தார்.


கணவர் உணவருந்திய பின்னர் சிறிது நேரம் கடந்தே கொங்கணருக்கு வாசுகி உணவு எடுத்து வந்தார். இதனால் கொங்கனர் சினத்துடன் வாசுகியை விழித்துப் பார்த்தார் . உடனே வாசுகி 'கொக்கென்று நினைத்தாயோ கொங்கணவா? ' என்று கேட்டார்.


இதனால் அதிசயத்துப் போன கொங்கணர் வாசுகியிடம் பணிந்து விளக்கம் கேட்டார் . அப்போது கடவுள் பக்தியானது தவம் , யோகம் போன்ற சிரத்தையான விஷயம் மட்டும் இன்றி கணவருக்கு இல்லற கடனை சிறப்பாக செய்தாலும், கடவுள் அனுகிரகம் கிடைக்கும் என்று வாசுகி எடுத்துக் கூறினார் .


அதேபோல பெற்றோரை சிரத்தையுடன் பார்த்துக் கொள்பவர்களை இறைவன் பார்த்துக்கொள்வான் என்பதையும் எடுத்துக் கூறி வாசுகி கொங்கணருக்கு தனது ஆன்மீக ஞானத்தை விளக்கினார். இதனால் தெளிவு பெற்ற கொங்கனர் இறை நம்பிக்கையுடன் மனிதனுக்கு தேவையான பல நல்ல கருத்துக்களை கூறும் நூல்களை இயற்றினார் என்பர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News