Kathir News
Begin typing your search above and press return to search.

சொந்த வீடு கட்டி குடியேற ஆசையா? நீங்கள் வணங்க வேண்டிய தெய்வம் இதுதான்

நாகை மாவட்டம் திருமருகல் அருகே விற்குடியில் உள்ள வீரட்டானேஸ்வரர் கோவில் பக்தர்களின் தீய வினைகளை தீர்த்து வைப்பதாக நம்பப்படுகிறது.

சொந்த வீடு கட்டி குடியேற ஆசையா? நீங்கள் வணங்க வேண்டிய தெய்வம் இதுதான்

KarthigaBy : Karthiga

  |  29 Jun 2023 5:30 AM GMT

விற்குடி வீரட்டானேஸ்வரர் கோவில் மூலவர் வீரட்டானேஸ்வரர். தாயார் ஏலவர் குழலி பரிமளநாயகி. தலவிருட்சம் துளசியாகும். கோவில் தீர்த்தமாக சக்கர தீர்த்தம், சங்கு தீர்த்தம் ஆகிய குளங்கள் உள்ளன. கோவில் அமைந்துள்ள ஊர் திருவிற்குடி என அழைக்கப்பட்டு காலப்போக்கில் தற்போது விற்குடி என அழைக்கப்படுகிறது.


கோவிலில் சிவனுக்குரிய அனைத்து விழாக்களும் கொண்டாடப்படுகிறது. இத்தல இறைவன் சுயம்புலிங்கமாக அருள்பாலிக்கிறார். மேலும் இக்கோவிலில் வந்து வழிபடுவோருக்கு விரைவில் சொந்த வீடு கட்டி குடியேறும் பாக்கியம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.


மேலும் புதிய வீடு கட்டிக் கொண்டிருக்கும் போது தடை ஏற்பட்டால் விற்குடி வீரட்டானேஸ்வரர் கோவிலுக்கு வந்து வழிபட்டு இங்கிருந்து கல்லெடுத்துச் சென்று அந்த கல்லை வைத்து கட்டினால் தடைகள் நீங்கி விரைவில் நல்ல முறையில் கட்டுமான பணிகள் நிறைவுபெறும் என கூறப்படுகிறது. மேலும் முன்னோர்களின் சாபத்தால் பாதிக்கப்பட்டவர்களும் இந்த கோவிலுக்கு வந்து வழிபட்டால் தோஷம் நீங்கும் என்பது ஐதீகம். இக்கோவில் அம்மன் பரிமளநாயகி .


பிருந்தை என்ற சொல்லுக்கு துளசி என்பது பொருள் கற்பில் சிறந்த பெண்மணியின் நினைவாக துளசி தான் இங்கு தலவிருட்சம். இந்த கோவில் வாஸ்து தோஷ நிவர்த்தி தலமாகவும் போற்றப்படுகிறது.விற்குடி வீரட்டானேஸ்வரர் கோவில் தினமும் காலை 6:00 மணி முதல் மதியம் 12 மணி வரையும் மாலை 4:30 மணி முதல் இரவு 8 மணி வரையும் நடைபெறும்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News