பச்சை கற்பூரம் பணத்தை ஈர்க்குமா? உண்மை என்ன?
By : G Pradeep
கற்பூரத்தின் தாய் நாடு ஜப்பான் சீன மற்றும் தென்கொரிய என்று சொல்லப்படுகிறது ஆனாலும் இது இந்தியாவில் தான் அன்றாட ஆன்மீக வழிபாடுகளுக்கும் தினசரி பயன்பாட்டிற்கும் அதிகமாக பயன்படுகிறது. கற்பூரம் ஒன்றுதான் திடப்பொருளாக இருந்த திரவ பொருளாக மாறாமலேயே ஆவியாக மாறும் தன்மை கொண்டது.
வேறு எந்த திடப்பொருளுக்கும் இந்த தன்மை கிடையாது. இந்திய கலாச்சாரத்தில் அக்னி என்பது நம் எண்ணங்களை தெய்வங்களிடம் கொண்டு செல்லும் தூதுவனாகவும் நம் செய்யும் செயல்களுக்கு சாட்சியாகவும் கருதப்படுகிறது. அந்த அக்னியை இந்த கற்பூரத்தில் எளிதாக கொண்டு வர முடியும் என்பதால் எல்லா ஆன்மீக சுப நிகழ்ச்சிகளுக்கும் இந்த கற்பூரம் ஏற்றி வழிபடுகிறார்கள் கற்பூரத்திற்கு வேறு பயன்களும் உண்டு குறிப்பாக பச்சை கற்பூரம் செல்வத்தை ஈர்க்கும் தன்மை கொண்டது. இந்த பச்சை கற்பூரத்தை ஒரு மஞ்சள் துணியில் கட்டி குபேர மூலையில் வைத்து தூபம் காண்பித்து வழிபட்டு வந்தாலே போதும் செல்வ செழிப்பு தானாக வளரும்.
பச்சை கற்பூரம் இயல்பாகவே அதிக வாசனை நிறைந்தது இதன் வாசனையை துர் சக்திகளை விராட்டி நல்ல சக்திகளை வீட்டிற்குள் அழைத்து வரும் தன்மை கொண்டது. மேலும் இந்த பச்சை கார்ப்பூரத்தின் வாசனை மகாலஷ்மி யின் அருளையும் வீட்டில் ஏற்படுத்தும். வீட்டில் நடைபெறும் எல்லா சுப நிகழ்ச்சிகளுக்கும் பச்சை கற்பூரம் இருக்க வேண்டும்.
இந்த பச்சை கற்பூரம் வேண்டுதலை நிறைவேற்றி தரும் தன்மை கொண்டது. இந்த கற்பூரத்தை கைகளில் வைத்து கொண்டு நம் வேண்டுதலை தீவிரமாக எண்ணி பின்னர் இதை ஒரு பூஜையறையில் வைத்து விட வேண்டும், இப்படி தினசரி செய்து வருவதால் நம் பிராத்தனைகள் பலிக்கும். பச்சை கற்பூரத்தை நம்மோடு வைத்துக்கொண்டால் அதாவது நாம் வெளியே செல்லும் போது இரண்டு மூன்று பச்சை கற்பூரத்தை எடுத்து நம் பணப்பையில் வைத்துக்கொண்டோம் என்றால் கண்திருஷ்டி முழுமையாக அகலும்.
இது தவிர உடல் மற்றும் சரும நோய்களுக்கும் கற்பூரத்தாய் பயன்படுத்தலாம். தோலில் வரும் அரிப்பு எரிச்சல் தழும்புகள் போன்றவை அகல கற்பூரத்தை பயன்படுத்தலாம். தீராத மூட்டு வலி மற்றும் முதுகு வலி போன்ற உபாதைகளுக்கு கற்பூர எண்ணெய் தேய்ப்பது சிறந்த நிவாரணத்தை தரும்.