Kathir News
Begin typing your search above and press return to search.

உண்மையில் பணத்தை ஈர்க்குமா Money Plant(மணி பிளான்ட்) ? ஆச்சரிய தகவல்கள்.!

உண்மையில் பணத்தை ஈர்க்குமா Money Plant(மணி பிளான்ட்) ? ஆச்சரிய தகவல்கள்.!

உண்மையில் பணத்தை ஈர்க்குமா Money Plant(மணி பிளான்ட்) ? ஆச்சரிய தகவல்கள்.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  22 Nov 2020 6:00 AM GMT

வாஸ்து என்பது வீடு அமைந்திருக்கும் திசையை மாத்திரம் மையப்படுத்தியது அல்ல. அத்தனையும் தாண்டி வீட்டில் உள்ள குறிப்பிட்ட சில பொருட்கள் எந்த திசையில் இருக்கிறது என்பதையும் அடிப்படையாக கொண்டு இயங்குகிறது. குறிப்பாக செடிகளை நாம் வளர்ப்போம் எனில், அதிலும் குறிப்பாக மணி பிளான்ட் என ஆங்கிலத்தில் சொல்லப்படும் வாஸ்து செடியை வீட்டில் எந்த திசையில் வைக்கிறோம் என்பது முக்கியமானது.

இதற்க்கு மணி பிளான்ட் என்றால் என்ன என்கிற ஒரு சிறு விளக்கம் இங்கே. மணி பிளான்ட் என்பது அடிப்படையில் வீட்டினுள் ஒருவகை செடி. மணி என்கிற ஆங்கில சொல் பணம் என்பதை குறிக்கிறது. பெயருக்கு ஏற்றார் போல மணி பிளான்டின் இலைகள் ரூபாய் நோட்டுகளை போல நீளமாக இருக்குமாம். அதனாலேயே இந்த செடிக்கு இந்த பெயர் வந்தது எனவும் சொல்கிறார்கள்.

இந்த செடியினுடைய நோக்கம் என்பது வாஸ்து சாஸ்திரப்படி இந்த செடியை வீட்டில் பணப்புழக்கம் அதிகரிக்கும் என சொல்லப்படுகிறது. ஆனாலும் கூட இந்த செடியை வீட்டில் வைக்கிற போது நிலையில் கொள்ள வேண்டிய குறிப்புக்கள் சில இங்கே தொகுக்கப்பட்டுள்ளது.

இந்த செடி ஒருபோது வறட்சியுடன் இருக்க கூடாது. எப்போதும் ஈரப்பதத்துடன் இருக்க வேண்டும் என்பது அடிப்படை விதி. அடுத்து, இந்த செடி ஒருபோதும் வடகிழக்கு திசையில் இருக்க கூடாது . இது வீட்டின் பொருளாதாரத்தை பாதிப்பது மட்டுமின்றி வீட்டில் இருப்போரின் உடல் நலத்தையும் பாதிக்கும்.

அடுத்ததாக, இந்த செடி கட்டுப்பாடின்றி வளர்ந்து வரும் சூழலில் உங்கள் தேவைக்கும் இடத்திற்கும் ஏற்ப இதனை செதுக்கி கொள்ளலாம். ஆனால் ஒருபோதும் இதன் இலைகள் சேதமுற்று தானாக கீழே விழும்படி வைத்து கொள்ளாதீர்கள். அது தவறான நிமித்தமாகும்.

இந்த செடி வைக்கப்பட வேண்டிய திசை என்பது, தென் கிழக்கு திசையாகும். இந்த திசை கணபதிக்கு உகந்தது. எனவே இந்த திசையில் இச்செடியை வைப்பது வீட்டிற்கு நல்ல அதிர்வுகளை, ஆனந்தத்தை அமைதியை கொண்டு வரும்.

இந்த செடி என்பதே பணத்தின் அடையாளம் தான். எனவே இதில் அதிகமான இலைகள் இருக்குமாயின் நம்மிடம் அதிகமான பணப்புழக்கம் இருக்கும் என்பது நம்பிக்கை. பணம் மாத்திரமல்லாமல் இந்த செடி வீட்டில் இருக்கும் தீய சக்திகளையும் விரட்டியடிக்கும் தன்மையுடன் திகழ்கிறது.

இதில் சொல்லப்படும் மற்றொரு முக்கிய ஐதீகம் என்னவெனில் இந்த செடியை எக்காரணம் கொண்டும் வீடு உறுப்பினர்கள் தவிர மற்றவர்கள் வெட்டவோ அல்லது அனுமதிக்க கூடாது.

காரணம், நம் வீடு செல்வம் அவர்களிடம் சென்று விடும் என்பது வழக்கமாக சொல்லப்படும் கருத்து . இந்த செடி பறந்து விரிந்து வளரும் தன்மையுடையது எனவே இதனை சிறிய தொட்டியில் வளர்க்க முயற்சிக்காதீர்கள்.நல்ல விலாசமான இடமுள்ள தொட்டியில் வளர்ப்பது நலம்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News