Kathir News
Begin typing your search above and press return to search.

கண் திருஷ்டியால் உங்கள் வாழ்க்கையில் கஷ்டங்கள் ஏற்படாமல் இருக்க இவற்றையெல்லாம் செய்யாதீர்கள்

திருஷ்டி தான் இருப்பதிலேயே பெரிய சோதனைகளை தரும் என்கிறார்கள். அப்படியென்றால், வீட்டுக்கு வரும் விருந்தினர்களிடம் பகிரக்கூடாத சில விஷயங்கள் இருப்பது உங்களுக்குத் தெரியுமா?

கண் திருஷ்டியால் உங்கள் வாழ்க்கையில் கஷ்டங்கள் ஏற்படாமல் இருக்க இவற்றையெல்லாம் செய்யாதீர்கள்
X

KarthigaBy : Karthiga

  |  18 Jun 2023 6:30 AM IST

உங்கள் வீட்டிற்கு வரும் உறவினர்கள் சில பொருட்களை காட்டக்கூடாது என்கிறார்கள் . மீறியவற்றை நீங்கள் காட்டினால் அதனால் கண் திருஷ்டி ஏற்பட்டு நீங்கள் வாழ்வியல் துன்பத்தை அனுபவிக்க கூடும் என்ற நம்பிக்கை உள்ளது. புதிதாக வாங்கிய ஆடைகளை வீட்டிறகு வரும் உறவினர்களிடம் காட்ட வேண்டாம் என்கிறார்கள். அதனால் அவர்களுக்கு ஏற்படும் ஏக்கம், நமக்கு திருஷ்டியை தரலாம்.


புதிதாக வாங்கிய நகைகளையும் உறவினர்களிடம் காட்டக் கூடாதாம். காரணம், அதுவும் காண்போரிடம் ஏக்கத்தை ஏற்படுத்தி நமக்கான திருஷ்டியை ஏற்படுத்தும் என்கிறார்கள். உங்களின் சம்பாத்யத்தையும், சேமிப்பையும், கையிருப்பு மற்றும் வீட்டில் இருப்பில் உள்ள பணத்தைப் பற்றிய விபரங்களை வீட்டுக்கு வரும் உறவினர்களிடம் தெரிவிக்க கூடாது. அதுவும் ஒருவகையான திருஷ்டி தான் என்கிறார்கள்.


நீங்கள் வாங்கி வைக்கும் மளிகைப் பொருட்களை வீட்டிற்கு வரும் விருந்தினர்களிடம் காட்ட வேண்டாம் என்கிறார்கள். காரணம், அது நம் வளம் மீதான கண் திருஷ்டியை தருமாம்.குறிப்பாக அழகான உங்கள் படுக்கை அறையை உறவினர்களிடம் காட்டக் கூடாது. அவ்வாறு காட்டி அதனால் திருஷ்டி ஏற்பட்டால் அது தம்பதிகளுக்குள் சண்டை சச்சரவை ஏற்படுத்தும் என்கிறார்கள்.


வீட்டுக்கு வரும் உறவினர்களிடம் உங்கள் குழந்தையின் சுறுசுறுப்பு, திறமையை அதிகம் பகிர வேண்டாம். அது அவர்கள் மீதான திருஷ்டியை அதிகரிக்க வாய்ப்பு என்று கூறுகிறார்கள்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News