தலைகீழாக காட்சி தரும் ஈசன்
ஆந்திர மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டத்தில் ஈசன் தலைகீழாக காட்சி தருகிறார்.
By : Karthiga
ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள பீமாவரம் என்ற ஊர். இந்த ஊரின் அருகில் யானமத்துரு என்ற இடம் அமைந்துள்ளது. இங்கு சக்தீஸ்வரர் ஆலயம் இருக்கிறது. இந்த ஆலயத்தில் சதுர வடிவ ஆவுடையாரின் மீது சிவலிங்கத் தோற்றத்தில் இறைவன் அருள்பாலிக்கிறார். இதில் என்ன விசேஷம் என்றால் இந்த சிவலிங்கத் தோற்ற கல்லின் மீது ஜடாமுடியுடன் கூடிய சிவபெருமானின் உருவம் செதுக்கப்பட்டுள்ளது. அதுவும் தலைகீழாக தியான கோலத்தில் இருப்பது போல கண்களை மூடி இருக்கும் ஈசனின் தலைப்பகுதி கீழேயும் கால் பகுதி மேலேயும் அமைந்திருக்கிறது.
இந்த இறைவனின் அருகில் அம்பாளும் அமர்ந்திருக்கிறார். அவர் தன்னுடைய மடியில் குழந்தையை கிடத்தி வைத்திருக்கும் நிலையில் காட்சி தருகிறார். மடியில் இருக்கும் இந்த குழந்தை கார்த்திகேயன் என்று சொல்கிறார்கள். இந்த இறைவனையும் அம்பாளையும் வழிபட்டால் குடும்ப ஒற்றுமை ஓங்கும் . கணவன் மனைவி பிரச்சினை மறையும். குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது.