சகல தோஷம் நீக்கும் ஏரிக்குப்பம் யந்திர சனி பகவான்
நாம் செய்த பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப நடுநிலையுடன் பலன்களைத் தருபவர் சனி பகவான் எனவே அவருக்கு 'நீதிமான்' என்ற சிறப்பு பெயரும் உண்டு.
By : Karthiga
ஒருவருக்கு கண்டகச் சனி, ஏழரைச் சனி அஷ்டமச்சனி இவை மூன்றும் கோச்சாரத்தில் இருக்கும் போது நவகிரக ஹோமம் செய்வதுடன் சனி பகவானுக்கு பரிகாரமும் செய்வது அவசியம். அஷ்டமத்தில் சனி இருக்கும் போது சிவபெருமானை பிச்சை எடுக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது. சீதைக்கு ஜென்மத்தில் சனி இருந்த போது தான் ராவணன் இலங்கைக்கு அவரை கவர்ந்து கொண்டு போனான். அரிச்சந்திரனும் நலனும் அஷ்டமத்தில் சனி இருந்து ஆட்டிப்படைத்த போது தான் நாடு, மனைவி, மக்கள் என சகலத்தையும் இழந்து நிர்கதியாக நின்றார்கள். என்றெல்லாம் புராணங்கள் எடுத்து இருக்கின்றன.
ஆனாலும் இவ்வளவு துன்பங்களை தருபவராக இருந்தாலும் சனி பகவான் இளகிய மனம் படைத்தவர் சனி பகவான். ஒவ்வொரு ராசியும் உயிர் வாழ்வதற்கு காரணமான ஜீவநாடி ஆகும். எனவேதான் சனிபகவான் ஆயுள்காரகன் எனவும் அழைக்கப்படுகிறார் . இப்படிப்பட்ட சனிபகவான் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே உள்ள ஏரிக்குப்பம் கோவிலில் எந்திர வடிவில் அமைந்து பக்தர்களின் குறைகளை தீர்த்து வருகிறார். அவருடன் அவரது அண்ணி சாயாதேவியும் எந்திர வடிவில் அருள்பாலிக்கிறார்.
தாய் அருகில் இருப்பதால் சனி பகவான் எப்போதுமே சாந்தமாகவே இருப்பார். இந்த சனி பகவான் எந்திர வடிவில் ஐந்தடி உயரம் இரண்டரை அடி அகலம் கொண்டு அருங்கோன வடிவத்தில் அமைந்துள்ளார். அதன் ஆறு முனைகளில் திரிசூலமும் அடிப்பாகத்தில் மகாலட்சுமி அனுமார் வடிவங்களும் இடம்பெற்றுள்ளன. எந்திர சிலையின் மேல் பக்கம் தென்புறமாக சூரியனும் நடுவில் ஸ்ரீ சனி பகவானின் வாகனமான காகத்தின் உருவமும் வலப்புறமாக சந்திரனும் உள்ளனர்.
அவற்றின் கீழே ஷட்கோண யந்திரமும்,நீர், நெருப்பு சம்பந்தப்பட்ட யந்திரமும் பொறிக்கப்பட்டுள்ளது. மேலும் சிவன், ஆஞ்சநேயர் மந்திரங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. ஒரு கண்ணாடியை இந்த எந்திரத்தின் முன்வைத்து பார்த்தால் எழுத்துக்கள் நேராக தெரியும் படி அமைந்துள்ளது. இது போன்றதிட அமைப்புடைய சிலை வடிவத்தை அதிலும் சனி அம்ச சிலாரூபத்தை ஏரிக்குப்பம் தவிர்த்து வேறு எங்கும் காண்பது அரிது.
1535 - ஆம் ஆண்டு ஏரிக்குப்பம் பகுதயி ஆட்சி செய்து வந்த நாயக்க மன்னரின் படைத்தளபதியாக விளங்கியவர் வையாபுரி. இவர் இவ்வழியாக குதிரையில் சென்று கொண்டிருந்தார். காரணம் ஏதும் இன்றி திடீரென ஓடும் குதிரையிலிருந்து கீழே விழுந்த வையாபுரிக்கு இடது காலில் மறைவு ஏற்பட்டது குதிரையும் நிலை தடுமாறி விழுந்ததால் அதற்கும் பலத்த அடி.
அச்சமயம் ஒரு பெண்ணின் வாயிலாக இறைவன் வெளிப்பட்டு சனி பகவானுக்கு கோவில் ஒன்றை இங்கே எழுப்புமாறும் சிறப்பு வழிபாடுகள் செய்யச் சொல்லி மேலும் அதனால் வையாபுரியின் உடல்நலம் சேரும் என்றது அதனுடைய உடல் தேறிய வையாபுரி பெரியோர்களின் ஆலோசனைப்படி எந்திர வடிவிலான சனி சிலையை அமைத்து நான்கு கால பூஜைகள் செய்து வந்தார் கால வெள்ளத்தில் கோவில் சிதைவுட்டுது எந்திர சிலை முட்புதலால் மூடப்பட்டது. சமீபத்தில் தொல்பொருள் துறையினரால் அகழ்வாராய்ச்சி செய்யும் பொழுது மீண்டும் கண்டெடுக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்று வருகிறது.
கோவிலுக்கு பின்புறத்தில் அமைந்துள்ள 'பாஸ்கர தீர்த்தம்' என்ற குளத்தில் நீராடி சனி பகவானை வழிபட்டால் திருமண வரம், குழந்தை பேறு, நோய் நிவர்த்தி, லக்ஷ்மி கடாட்சம் சனி தோஷம் மற்றும் சகலதோஷம் கொண்டவை நிறைவேறுவதாகவும் எள் முடிச்சிட்ட தீபம், நல்லெண்ணெய் தீபம் ஆகியவற்றை ஏற்றினால் வரம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. தடைபட்ட சுப நிகழ்ச்சிகள் நடைபெறவும் நோய், தோஷம் அகலவும் ஒன்பது சனிக்கிழமை இங்கு வந்து எள் முடிச்சு தீபம் ஏற்றினால் நன்மை கிடைக்கும்.