Kathir News
Begin typing your search above and press return to search.

உலக மக்களுக்கு அன்னம் அளிக்கும் அன்னபூரணியின் ஆச்சர்ய வரலாறு!

உலக மக்களுக்கு அன்னம் அளிக்கும் அன்னபூரணியின் ஆச்சர்ய வரலாறு!

G PradeepBy : G Pradeep

  |  19 March 2021 12:31 AM GMT

சமஸ்கிருதத்தில் அன்ன " என்றால் உணவு. " பூரணா " என்றால் முழுமை. ஒன்றாக இணைந்து உச்சரிக்கிற போது அன்னத்தின் ஊட்டச்சத்தை முழுமையாக வழங்குபவள் என்று பொருள். தேவி அன்னபூரணி உணவின், அறுவடையின் கடவுளாக போற்றப்படுபவள். ஒவ்வொறு உயிரின் பசியை போக்குபவள் இவளே.

ஒவ்வொறு உயிரின் பசியின் தேவையையும் தன்னுடைய தன்னிகரற்ற சக்தியினால் அவள் தீர்த்து வைக்கிறாள் என்பது காலம் காலமாக கொண்டிருக்கும் நம்பிக்கை. இந்து மத நம்பிக்கையின் படி உணவை எல்லையின்றி வாரி வழங்கும் அன்னை இவளே. குழந்தைகளுக்கு வழங்கப்படுகிற ஊட்டச்சத்தின் தெய்வீக குறியீடே அன்னபூரணி அம்பிகை.


இந்து மத வழக்கத்தின் படி, எங்கே உணவு வீணடிக்கப்படுகிறதே அவர்கள் அன்னபூரணியின் கோபத்திற்கு ஆளாவார்கள் என்பதை ஒரு அறநெறியாகவே போதித்து வருகிறார்கள்.

அன்னபூரணி உருவான கதை இந்து புராணகதைகளில் மிக சுவாரஸ்யமாக சொல்லப்படுவதுண்டு. ஒருமுறை பூமியில் உணவுக்கான பஞ்சம் ஏற்பட்ட போது, பூமியில் வாழ்ந்த மனிதரெல்லாம் உணவின்றி கொத்து கொத்தாக செத்து மடிந்த போது பிரம்ம தேவரும், மகா விஷ்ணுவும் மிகவும் கலக்கம் கொண்டு இதற்கான தீர்வை தேடி சிவபெருமானிடம் சென்றதாகவும்.

சிவபெருமான் தேவி அன்னபூரணியை வலியுறுத்தி அழைத்து உணவை வழங்குமாறு கோரியதாகவும் சொல்லப்படுவதுண்டு. சிவபெருமானின் கோரிக்கையை ஏற்று உணவை வழங்கிய தேவி அன்னபூரணிக்கு சிவன் ஒரு வரத்தையும் அளித்துள்ளார். அதாவது தேவி உலக மக்களுக்கு தொடர்ந்ந்து உணவை அளிக்க வேண்டும் அவ்வாறு செய்தால் தேவியின் வசிப்பிடமான காசியில் உள்ள மக்களுக்கு தான் மோட்சத்தை அளிப்பதாகவும் கூறியுள்ளார்.


சில ஆன்மீகவாதிகள் தேவி அன்னபூரணி அம்பிகை பார்வதியின் அவதாரம் என நம்புகின்றனர். அன்னபூரணி உணவுக்கான கடவுளாக மட்டுமல்லாமல் செழிப்பின், வளத்தின் அடையாளமாக கருதப்படுவதால் கிராமத்திலிருக்கும் விவசாயிகள் அன்னபூரணியை பெரும் விருப்பத்துடன் கொண்டாடுகிறார்கள்.

அன்னபூரணியின் திருவுருவம் என்பது, அவள் கைகளில் ஒரு கிண்ணத்தில் நெல்மணிகளை நிறைவாக கொண்டிருப்பதை போல அமைந்திருக்கும். இது அன்னை அன்னபூரணி தன் பிள்ளைகளான பூமியில் வாழும் மக்களுக்கு அளிப்பதற்காக கை நிறைய உணவை கொண்டிருப்பதன் குறியீடாக கருதப்படுகிறது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News