140 அடி உயரம் கொண்ட பிரமாண்ட பத்துமலை முருகன்! ஆச்சர்ய வரலாறு!
By : G Pradeep
பத்து குகை ( பத்து கேவ்ஸ்) என்று அழைக்கப்படும் பத்துமலை மலேசியாவில் உள்ளது . ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் தமிழகத்தில் இருந்து நிறைய மக்கள் கூலி தொழிலாளர்களாக மலேசியா சென்றனர்.
அப்படி சென்ற பல தமிழர்களில் ஒருவர் பத்துமலை என்று அழைக்கப்படும் இப்பகுதியில் உள்ளகுகை பாறை ஒன்றில் வேல் மாதிரியான உருவம் ஒன்றை பார்த்து அந்த குகைக்கு அருகில் மூங்கிலை நட்டு அதை வேலாக வணங்கி வந்துள்ளார் . அதன்பிறகு நாளடைவில் உலோகத்தினால் ஆன வேல் நிறுவபட்டு வழிபடபட்டது . அதன் பின் 1891 ல் காயாராகனம் பிள்ளை என்பவர் இங்கு முருகப்பெருமானுக்கு ஆலயம் எழுப்பினார் .
புராணங்களின் அடிப்படையில் புலவர் நக்கீரரை பூதம் ஒன்று குகைக்குள் அடைத்து விட்டதாகவும் ஏற்கனேவே அதில் 999 பேர் இருந்ததால் 1000 ஆவது நபரை கொண்டு வந்து அடைத்த பிறகு அனைவரையும் கொன்று தின்ன தயாரானது. அப்போது நக்கீரன் முருகப்பெருமானை வேண்டிக் கொள்ள முருகனின் வேல் வந்து பூதத்தை பிளந்து அனைரையும் காப்பாற்றியது.
இந்த பத்து மலைக் குகையின் அளவு 1000 பேரை அடைத்து வைக்குமளவிற்கு உள்ளது . மேலும் நக்கீரர் கடல் தாண்டி அடைத்து வைக்கப்பட்டார் என்பதாலும் இதுவே அந்த குகை என்று நம்பபடுகிறது . அதனாலேயே இக்குகை பாறையில் வேல் தெரிந்திருக்கிறது, மட்டுமல்லாமல் முருகனே இக்குகை கோயிலை உலக பிரசித்தி பெற செய்திருக்கிறார் .
இந்த மலையின் அடிவாரத்திலேயே பக்தர்களை வரவேற்க முருகன் 42.7 மீட்டர் அதாவது 140. 09 அடி உயரத்தில் பிரம்மாண்டமாக நிற்கிறார் . உலகிற்கே மலேசியாவை அடையாளம் காட்டும் விதமாகவும் முருக பக்தியின் பரவலுக்கு அடையாளமாகவும் இந்த முருகன் சிலை திகழ்கிறது . 2003 ஆம் ஆண்டில் பணிகள் ஆரம்பிக்கபட்டு 2006ல் முடிவுற்றது .
தாய்லாந்து நாட்டிலிருந்து வந்த விஷேச பொன்னிற கலவையால் இந்த முருகன் சிலை தங்கம் போல் ஜொலிக்கிறது .இந்திய ரூபாயின் மதிப்பில் 2 கோடியே 40 லட்சம் ரூபாய் செலவு செய்ய பட்டிருக்கிறது. முழுவதும் சுண்ணாம்பு கற்களால் ஆன இந்த குகையின் அருகில் ஓடும் பத்து ஆற்றின் பெயரில் இம்மலை பத்து மலை என்று அழைக்க படுகிறது.
இங்கு நடக்கும் தைப்பூசம் உலக பிர சித்தி பெற்றது தமிழர்கள் மட்டுமல்லாது சீனர்கள் மற்றும் வெளிநாட்டினரும் பால் குடம் காவடி எடுத்து அலகு குத்தி வேண்டுதல் செய்கின்றனர் அன்றைய தினத்தில் சுமார் ஒரு கோடி பக்தர்கள் உலகெங்கிலும் இருந்து குவிகின்றனர் . இந்து மத கோயிலாக இருந்தாலும் மத பாகுபாடின்றி அனைவரும் வந்து செல்லும் இடமாக இந்த கோயில் திகழ்கிறது
ஆரம்ப காலத்தில் கோயிலுக்கு செல்ல ஒற்றையடி பாதையை மட்டுமே பயன்படுத்திய நிலையில் தற்போது முன்று வழி நடைபாதைகள் அமைக்கப்பட்டு மேலும் ஒரு ரயில் பாதையும் அமைக்க பட்டிருக்கிறது. இனி வரும் காலங்களில் இக்கோயில் முருகன் திருவுளத்தால் மென்மேலும் வளர்ச்சி அடையும் என பக்தர்கள் நம்புகிறார்கள்.